உலகம்

அப்பாச்சி ரக ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதால் ஈரான் மீது அமெரிக்கா பதில் தாக்குதல்

செய்திப்பிரிவு

டெஹ்ரான்: அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதால், ஈரானின் பல நகரங்​கள் மீது அமெரிக்க கடற்படை நேற்று கடும் தாக்​குதல் நடத்​தின.

ஈரான் - அமெரிக்கா இடையே​யான போர், தற்​காலிக​மாக நிறுத்தப்​பட்​டிருந்​தா​லும் அவ்​வப்​போது இருதரப்​புக்கு இடை​யிலும் தாக்​குதல் நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில், ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த அமெரிக்​கா​வின் அதிநவீன அப்​பாச்சி ரக தாக்​குதல் ஹெலி​காப்​டர் ஒன்றை ஈரான் படைகள் சுட்டு வீழ்த்​தின. ஆனால், திட்​ட​மிட்டு ஹெலி​காப்​டர் மீது தாக்​குதல் நடத்​த​வில்லை என்று ஈரான் தெரி​வித்​தது.

எனினும், அப்​பாச்சி ரக ஹெலி​காப்​டர் சுட்டு வீழ்த்​தப்​பட்​டதற்​குப் பதிலடி கொடுக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்​று​முன்​தினம் உத்​தர​விட்​டிருந்​தார். அதன்​படி தெற்கு ஈரான் பகு​தி​யில் உள்ள குவாஷெம் தீவு, ஜாஸ்க், சிரிக், பந்​தார் அப்​பாஸ் உட்பட பல நகரங்​கள் மீது அமெரிக்க கடற்​படை நேற்று கடும் தாக்​குதல் நடத்தின. இதில் ஈரானின் வான் பாது​காப்பு கட்​டமைப்​பு​கள், ரேடார் கட்​டமைப்​பு​கள் சேதம் அடைந்​த​தாக ஈரான் உறுதி செய்துள்​ளது.

இதுகுறித்து ஈரான் வெளி​யுளவுத் துறை அமைச்​சர் அப்​பாஸ் அரக்ச்சி கூறும்​போது, ‘‘ஈ​ரானின் உறு​திப்​பாட்டை அமெரிக்கா சோதித்து பார்க்​கிறது. எங்​கள் மீது நடத்​தப்​படும் ஒவ்​வொரு தாக்​குதலுக்​கும் நாங்​கள் சரி​யான பதில் அளிப்​போம். நீங்​கள் பாது​காப்​பாக இருக்க வேண்​டும் என்​றால், எங்​கள் பிராந்​தி​யத்தை விட்டு சென்று விடுங்​கள்’’ என்று எச்​சரித்​தார்.

இதற்​கிடை​யில், அமெரிக்​கா​வின் தாக்​குதலுக்கு பதிலடி​யாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கட்​டமைப்​பு​கள் மீது தாக்​குதல் நடத்​தியதாக ஈரானின் இஸ்​லாமிய புரட்​சிப் படை (ஐஆர்​ஜிசி) நேற்று தெரி​வித்​தது. இந்த தகவலை பஹ்ரைன் அரசு உறுதி செய்துள்ளது.

SCROLL FOR NEXT