அமெரிக்க நிதி​யமைச்​சர் ஸ்காட் பெசன்ட்

 
உலகம்

இந்தியா மீதான 25 சதவீத கூடுதல் வரியை நீக்க வாய்ப்பு: அமெரிக்க நிதியமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

டாவோஸ்: உலக பொருளா​தார அமைப்​பின் கூட்​டத்​தில் பங்​கேற்க சுவிட்​சர்​லாந்​தின் டாவோஸ் நகருக்கு வந்த அமெரிக்க நிதி​யமைச்​சர் ஸ்காட் பெசன்ட், பொலிட்​டிகோ செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது:

ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா கச்சா எண்​ணெய் வாங்​கிய​தால் அதன் மீது நாங்​கள் கூடு​தலாக 25 சதவீத வரி விதித்​தோம். இது எங்​களுக்கு வெற்​றி. தற்​போது ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​வது வெகு​வாக குறைந்து விட்​டது. இதனால் இந்​தியா மீது விதிக்​கப்​பட்ட கூடு​தல் வரியை நீக்க இருதரப்பு பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. இதனால் இந்​தியா மீதான கூடு​தல் வரி நீக்​கப்​படலாம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

          

ரஷ்​யா​விடம் எண்​ணெய் வாங்​கும் நாடு​கள் மீது 500 சதவீத வரி விதிப்​பது தொடர்​பான மசோதா மீது அமெரிக்க நாடாளு​மன்​றத்​தில் ஆலோ​சனை நடை​பெறும் நிலை​யில், இந்​தியா மீதான கூடு​தல் வரி நீக்​கப்​படலாம் என அமெரிக்க நிதி​யமைச்​சர் ஸ்காட் பெசன்ட் கூறி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT