உலகம்

எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதால் ஈரான் கடற்பகுதியை மீண்டும் முற்றுகையிட்ட அமெரிக்க கடற்படை

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: ஐக்​கிய அரபு அமீரகத்​துக்கு சொந்​த​மான 2 எண்​ணெய் கப்​பல்​கள் 2 நாட்​களுக்கு முன் ஹார்முஸ் ஜலசந்தியை ஓமன் கடற்​கரை வழி​யாக கடந்து சென்​ற​போது அவற்​றின் மீது ஈரான் ஏவு​கணை தாக்​குதல் நடத்​தி​யது. இதில் இந்​திய மாலுமி ஒரு​வர் உயி​ரிழந்​தார். 10 இந்​திய மாலுமிகள் காயம் அடைந்​தனர். இதற்கு இந்​தியா கண்​டனம் தெரி​வித்​தது.

இந்​நிலை​யில் ஈரான் மீது கடந்த சில நாட்​களாக தொடர் தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்கா, ஈரான் கடற்​பகு​தியை நேற்று முற்​றுகை​யிட்​டது. ஈரான் துறை​முகங்​களில் இருந்து எந்த கப்​பல்​கள் வெளி​யேற​ அனு​ம​திக்​க​வில்​லை. ஈரான் துறை​முகத் திற்​குள்​ளும் எந்த கப்பல்களும் அனு​ம​திக்​கப்​பட​வில்​லை. ஈரானின் வரு​வாயை மீண்​டும் முடக்க இந்த முற்​றுகையை அமெரிக்க கடற்​படை மேற்கொண்டுள்​ளது.

அதே நேரத்​தில் வான் வழி​யாக ஈரானின் ராணுவ தளங்​கள் மீது நடத்​தப்​படும் தாக்​குதலை​யும் அமெரிக்கா விரிவுபடுத்​தி​யுள்​ளது. ஈரான் கடலோர பகு​தி​யில் உள்ள ராணுவ முகாம்​களை அழித்த அமெரிக்கா தற்​போது ஈரானின் உள்​பகு​தி​களில் உள்ள ராணுவ முகாம்​களை குறி​வைத்து தாக்​குதல் நடத்தி வரு​கிறது.

பேச்சுவார்த்தை...

“ஈரான் மீண்​டும் பேச்​சு​வார்த்​தைக்கு திரும்ப வேண்​டும். இல்​லை யென்​றால் ஈரானின் பாலங்​கள் மற்​றும் மின் உற்​பத்தி மையங்கள் மீது அடுத்த வாரம் தாக்​குதல்​ நடத்​தப்​படும்​. அங்​கு எது​வும்​ இருக்​​காது” என அமெரிக்​க அதிபர்​ ட்​ரம்​ப்​எச்​சரிக்​கை விடுத்துள்ளார்​.

SCROLL FOR NEXT