உலகம்

இந்தியாவுக்கு 12.5% புதிய வரி விதித்த அமெரிக்கா - ‘இது இறுதி அல்ல’ என இந்தியா விளக்கம்

செய்திப்பிரிவு

வாஷிங்டன்/புதுடெல்லி: கட்​டா​யத் தொழிலா​ளர் முறையைத் தடுக்​கத் தவறிய​தாகக் கூறி, இந்​தி​யா, சீனா, பிரிட்​டன், ஜப்​பான் உள்​ளிட்ட 54 நாடு​கள் மீது 12.5% புதிய வர்த்தக வரி​களை விதிப்​ப​தற்​கான பரிந்​துரையை அமெரிக்கா நேற்று வழங்​கியது. அமெரிக்க வர்த்​தகப் பிர​தி​நி​தி​யின் (யுஎஸ்​டிஆர்) ‘செக்​சன் 301’ சட்​டப் பிரி​வின் கீழான விசா​ரணைக்​குப் பிறகு இந்த அறி​விப்பு வெளி​யாகி​யுள்​ளது.

இந்​தியா மற்​றும் அமெரிக்​கப் பிர​தி​நி​தி​களுக்கு இடையே டெல்லியில் மிக முக்​கிய​மான வர்த்​தகப் பேச்​சு​வார்த்தை நடந்து கொண்​டிருக்​கும் வேளை​யிலேயே இந்த அறி​விப்பு வெளியாகியிருக்கிறது. அதே வேளை​யில், கட்​டா​யத் தொழிலாளர் இறக்​குமதி​யைத் தடுக்க அமெரிக்கா​வுடன் பரஸ்பர வர்த்தக ஒப்​பந்​தத்​தில் இணை​யச் சம்​ம​தித்​துள்ள பாகிஸ்​தான், ஐரோப்​பிய யூனியன், கனடா உள்​ளிட்ட 6 நாடு​களுக்கு 10 சதவீதக் குறைந்​த​பட்ச வரியை அமெரிக்கா பரிந்​துரைத்​துள்​ளது.

இதற்​கிடையே, இந்த வரி விதிப்​புக் கொள்கை குறித்​துப் பேசிய இந்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​ துறை அமைச்​சகம், அமெரிக்கா​வின் இந்த வரி விதிப்​புப் பரிந்​துரை இன்​னும் இறுதியான ஒன்​றாக மாற​வில்லை என்று தெளிவுபடுத்​தி​யுள்​ளது. இது தொடர்​பாக கடந்த பிப்​ர​வரி மாதம் அறிவிக்​கப்​பட்ட கூட்டு உடன்​படிக்​கை​யின்​படி, இரு நாடு​களுக்​கும் இடையே கட்​டமைப்பு ஒப்​பந்​தத்தை இறுதி செய்​வதற்​கான பேச்​சு​வார்த்​தைகளில் இந்தியா தொடர்ந்து ஈடு​பட்டு வரு​கிறது.

வரும் ஜூன் 22-ம் தேதி வரை பொது​மக்​கள் மற்​றும் வர்த்​தகப் பங்களிப்​பாளர்​கள் இது குறித்த பொது விசா​ரணை​யில் பங்​கேற்க விண்​ணப்​பிக்​கலாம் என்​றும், ஜூலை 6 வரை எழுத்​துப்​பூர்​வ​மான கருத்​துக்​களைச் சமர்ப்​பிக்​கலாம் என்​றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 7 அன்று நடை​பெறும் பொது விசா​ரணைக்​குப் பிறகே அமெரிக்க வர்த்​தகப் பிர​தி​நிதி இதில் இறுதி முடிவை எடுப்​பார் என்று அமைச்​சகம் குறிப்​பிட்​டுள்​ளது.

கடந்த பிப்​ர​வரி மாதம் அமெரிக்க உச்ச நீதி​மன்​றம், ட்ரம்ப் நிர்வாகம் விதித்​திருந்த சில பரஸ்பர வரி​களைச் செல்​லாது என அறி​வித்​த​தால் முந்​தைய வர்த்தக ஒப்​பந்​தங்​கள் சட்​டப்​பூர்வ அந்தஸ்தை இழந்​தன. அதனை ஈடு​கட்​டவே தற்​போது மிக சக்திவாய்ந்த ‘செக்​சன் 301’ சட்​டப் பிரிவை அமெரிக்கா கையில்எடுத்​துள்​ளது.

1995-ல் உலக வர்த்தக அமைப்பு உரு​வாவதற்கு முன்​பு, ஐரோப்பா மற்​றும் ஜப்​பானுக்கு எதி​ராக அமெரிக்கா இதைப் பயன்படுத்தியது. தற்​போது உலக வர்த்தக அமைப்பு பலவீனமடைந்து வரும் சூழலில், ட்ரம்ப் நிர்​வாகம் மீண்​டும் இந்த கடுமை​யான சட்​டத்​தை கையிலெடுத்​துள்​ளது.

SCROLL FOR NEXT