உலகம்

ஈரானை விட்டு உடனே வெளியேறுங்கள்: தங்கள் நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு உத்தரவு

செய்திப்பிரிவு

தெஹ்ரான்: ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் உடனே வெளி​யேறு​மாறு அமெரிக்க அரசு எச்​சரித்​துள்​ளது.

அமெரிக்கா​வும் ஈரானும் கடந்த 1979-ம் ஆண்டு இஸ்​லாமியப் புரட்​சிக்கு பிறகு பகைமை பாராட்டி வரு​கின்​றன. இந்​நிலை​யில் கடந்த 2025 டிசம்​பர் முதல் ஈரான் அரசுக்கு எதி​ராக அந்​நாட்டு மக்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்​ளனர். போராட்​டத்தை ஒடுக்க ஈரான் மேற்​கொண்ட நடவடிக்​கை​யில் ஏராள​மானோர் கொல்​லப்​பட்​டனர். இந்த கொடூர அடக்​கு​முறைக்கு பதிலடி​யாக, ஈரான் மீது தாக்​குதல் நடத்​தப் போவ​தாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​தார். அப்​போது முதல் இரு நாடு​கள் இடையே மீண்​டும் பதற்​றம் அதி​கரித்​துள்​ளது.

          

ஈரான் அணு ஆயுதத்தை உரு​வாக்கி விடக் கூடாது என்​ப​தால் தங்​கள் நாட்​டுடன் ஒப்​பந்​தம் செய்து கொள்ள வேண்​டும் என ட்ரம்ப் கோரி வரு​கிறார். ஈரானை அச்​சுறுத்த அமெரிக்க போர்க் கப்​பல்​களை வளை​குடா பகு​திக்கு அனுப்பி வைத்​துள்​ளார்.

மத்​தி​யஸ்த நாடு​களில் ஒன்​றான துருக்​கி, இரு நாடு​கள் இடையே பதற்​றத்தை தணிக்க முயன்று வரு​கிறது. ஈரான் தனது அணு ஆயுத திட்​டம் பற்றி பேச்​சு​வார்த்தை நடத்த முன்​வந்​தா​லும் ஈரானின் ஏவு​கணை​கள் தொடர்​பாக​வும் பேச்​சு​வார்த்தை நடத்​தப்பட வேண்​டும் என ட்ரம்ப் கூறி வரு​வ​தால் பேச்​சு​வார்​த்தை​யில் முட்​டுக்​கட்டை ஏற்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், ஈரானில் உள்ள அமெரிக்க மக்​கள் உடனே ஈரானை விட்டு வெளி​யேற வேண்டும் என அமெரிக்க அரசு அறி​வுறுத்​தி​யுள்​ளது.

இதுகுறித்து ஈரானில் உள்ள மெய்​நிகர் தூதரகம் விடுத்​துள்ள அறிக்​கை​யில், “ஈரானை விட்டு அமெரிக்​கர்​கள் உடனே வெளி​யேற வேண்​டும். அமெரிக்க அரசின் உதவியை சாராத ஒரு வெளி​யேறும் திட்​டத்தை நீங்​கள் வகுக்க வேண்​டும். இணைய பயன்​பாட்​டுக்கு தடை ஏற்​படலாம். தகவல் தொடர்​புக்கு மாற்று வழிகளைத் திட்​ட​மிட வேண்​டும். விமான சேவை ரத்து செய்​யப்பட வாய்ப்​புள்​ளது. பாது​காப்​பாக இருந்​தால் சாலை மார்க்​க​மாக ஆர்​மீனியா அல்​லது துருக்கி செல்​லலாம்.

ஈரானை விட்டு வெளி​யேற முடி​யா​விட்​டால் வசிப்​பிடத்​தில் பாது​காப்​பான இடத்தை கண்​டறி​யுங்​கள். உணவு, தண்​ணீர், மருந்​துகள் மற்​றும் பிற அத்​தி​யா​வசி​யப் பொருட்​களை கையிருப்​பில் வைத்​திருங்​கள். பிறர் கவனத்தை ஈர்க்​காமல் இருங்​கள், உங்​கள் சுற்​றுப்​புறங்​களைப் பற்றி விழிப்​புடன் இருங்​கள். உங்​கள் நிலை குறித்து தெரிவிக்க குடும்​பத்​தினர் அல்​லது நண்​பர்​களு​டன் தொடர்​பில் இருங்​கள்” என்று கூறப்​பட்​டுள்​ளது. இதனால்​ அமெரிக்​கா - ஈரான்​ இடையே போர்​ பதற்​றம்​ மேலும்​ அ​தி​கரித்​துள்​ளது.

SCROLL FOR NEXT