அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

 
உலகம்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: மத்​திய கிழக்கு நாடு​களின் கோரிக்​கையை ஏற்று ஈரான் மீதான தாக்​குதல் நிறுத்​தப்​படு​கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.

அமெரிக்​கா - ஈரான் இடையே கடந்த பிப்​.28-ம் தேதி போர் தொடங்​கியது. கடந்த ஏப்​.8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்​தம் அமலுக்கு வந்​தது. ஜூன் 17-ம் தேதி இரு நாடுகள் இடையே அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. ஆனால், ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் சென்ற சில சரக்கு கப்​பல்​கள் மீது ஈரான் ராணுவம் தாக்​குதல் நடத்​தி​யது.

இதன்​காரண​மாக கடந்த ஜூலை 13-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மீண்​டும் தாக்​குதலை தொடங்​கியது. ஈரானின் ராணுவ தளங்​கள், ஆயுத உற்​பத்தி ஆலைகள், ஆயுதக் கிடங்​கு​கள், உள்​கட்​டமைப்​பு​களை குறி​வைத்து அமெரிக்க ராணுவம் அதிதீ​விர தாக்​குதல்​களை நடத்​தி​யது. இதற்கு பதிலடி​யாக ஐக்​கிய அரபு அமீரகம், சவுதி அரேபி​யா, குவைத், ஜோர்​டான் உள்​ளிட்ட நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்​கள் மீது ஈரான் ராணுவம் ஏவு​கணை, ட்ரோன்​கள் மூலம் தீவிர தாக்​குதல்​களை நடத்​தி​யது.

இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வு: இரண்​டாம் உலகப்​போருக்கு பிறகு மிகப்​பெரிய அச்​சுறுத்​தலாக ஈரான் உரு​வெடுத்​திருக்​கிறது. அந்த நாட்டு ராணுவம், தீவிர​வாத அமைப்பு போன்று செயல்​படு​கிறது. ஈரானுக்கு எதி​ரான போருக்கு அமெரிக்கா முழு​வீச்​சில் தயா​ராக உள்ளது.

எனினும், போரை நிறுத்​து​மாறு ஈரானும், மத்​திய கிழக்கு நாடு​களும் கோரிக்கை விடுத்​துள்​ளன. இதன்​மூலம் அமைதி ஒப்​பந்​தத்தை ஏற்​படுத்த முடி​யும் என்று அந்த நாடு​கள் வலி​யுறுத்தி வரு​கின்​றன. இதை ஏற்று ஈரான் மீதான தாக்​குதல் நிறுத்​தப்​படு​கிறது. ஹார்​முஸ் ஜலசந்தி முழு​மை​யாக திறக்​கப்பட வேண்​டும். ஈரானின் அணு ஆயுத அச்​சுறுத்​தலுக்கு நிரந்தர முற்​றுப்​புள்ளி வைக்க வேண்​டும் என்​ப​தில் அமெரிக்கா உறு​தியாக உள்​ளது.

இதை மையப்​படுத்தி அமைதி ஒப்​பந்​தம் வரையறுக்​கப்பட வேண்​டும். உலக நன்மை கருதி போர் நிறுத்த முடிவை எடுத்​துள்​ளோம். அமெரிக்​காவோடு இணைந்து போர் நிறுத்​தத்தை அமல்​படுத்த இஸ்​ரேலும் உறுதி அளித்​திருக்​கிறது. இவ்​வாறு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.

சவுதி - ஈரான் பேச்​சு​வார்த்தை: இதற்கிடையே, சவுதி அரேபியா வெளி​யுறவு அமைச்​சர் பைசல் பின் பர்​ஹான் நேற்று ஈரான் வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அராக்​சியை தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு பேசி​னார். அப்​போது போர் நிறுத்​தத்தை அமல் செய்​வது தொடர்​பாக இரு நாடு​களின் அமைச்​சர்​களும் விரி​வாக ஆலோ​சனை நடத்​தினர். அப்​போது அமெரிக்கா தாக்​குதல் நடத்​தி​னால், பதில் தாக்​குதல் நடத்​து​வோம் என்று ஈரான் அமைச்​சர் அப்​பாஸ் எச்​சரிக்கை விடுத்​தார்.

இதனிடையே ஈரான் பாது​காப்​புத் துறை அமைச்​சர் சையத் மஜித் இப்னு ரெஸா நேற்று கூறும்​போது, “எதிரி​களின் (அமெரிக்​கா) சமீபத்​திய அறிக்கை உளவியல் ​ரீ​தி​யானது என்று கருதுகிறோம். நாங்​கள் அஞ்​ச​வில்​லை. எதற்​கும் தயார் நிலை​யில் இருக்​கிறோம். எங்​களது ராணுவ பலத்தை மேலும் அதி​கரிப்​போம்’’ என்று தெரி​வித்​துள்​ளார்.

கத்​தார் பிரதமர் ஷேக் முகமது கூறியபோது, ‘‘மேற்கு ஆசிய போரை நிறுத்​து​வது தொடர்​பாக சவுதி அரேபி​யா, கத்​தார், ஜோர்​டான், குவைத் உள்​ளிட்ட நாடு​களின் தலை​வர்​களு​டன் கத்​தார் அரசு தொடர்ந்து பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறது. ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் தடையற்ற கப்​பல் போக்​கு​வரத்தை உறுதி செய்​வது குறித்து சம்​பந்​தப்​பட்ட அனைத்து நாடு​களு​ட​னும் பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்டு வரு​கிறது’’ என்றார்.

சவுதி அரேபி​யா​வின் பட்​டத்து இளவரசரும் அந்த நாட்டு பிரதமரு​மான சல்​மான் நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்​புடன் தொலைபேசி​யில் விரி​வான பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். இதைத் தொடர்ந்தே போர்​ நிறுத்​த அறி​விப்​பை அதிபர்​ ட்ரம்ப்​ வெளி​யிட்​டதாக தகவல்​கள்​ வெளி​யாகி உள்​ளன.

இதுகுறித்து மேற்கத்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் தாக்குதல் நீடித்தால் வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் வயல்கள், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தகர்ப்போம் என்று ஈரான் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது. இதனால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் சீர்குலையும் அபாயம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து சவுதிஅரேபியா, கத்தார், ஓமன் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்கா, ஈரான் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த சமரச முயற்சிகளில் ஈடுபட்டன. குறிப்பாக சவுதி அரேபிய இளவரசர் சல்மான் அதிபர் ட்ரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதன்காரணமாகவே அதிபர் ட்ரம்ப் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இவ்வாறு அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT