வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜை ராஜினாமா செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் ராண்டி ஜார்ஜ், தனது பதவியை ராஜினாமா செய்து உடனடியாக ஓய்வு பெறுமாறு அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர்(போர்) பீட் ஹெக்செத் கேட்டுக் கொண்டுள்ளார். இதை அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனும் உறுதி செய்துள்ளது.
ராண்டி ஜார்ஜ் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து, எதுவும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், ஈரானுடனான போரில், அமெரிக்கா சில இடத்தில் இழப்புகளைச் சந்தித்திருப்பதால் ராண்டி ஜார்ஜ் நீக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. அதேநேரத்தில், இது உயர்மட்ட ராணுவத் தலைமைகளில் நடைபெறும் வழக்கமான ஒரு மறுசீரமைப்பு நடவடிக்கைதான் என்று பென்டகன் வட்டாரங்கள் தெரிவித்தன.