ஈரான் உச்ச தலைவர் மோஜ்தபா காமேனி
வாஷிங்டன்: ஈரான் உச்ச தலைவர் மோஜ்தபா காமேனி உட்பட சில தலைவர்கள் பற்றி தகவல் அளித்தால் ரூ.92 கோடி பரிசு அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்ட பிறகு அவரது மகன் மோஜ்தபா காமேனி ஈரான் உச்ச தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால், இதுவரை அவர் பொதுவில் வெளியே வரவில்லை. அயத்துல்லா காமேனி தாக்கப்பட்ட போது, மோஜ்தபாவும் படுகாயம் அடைந்து கோமா நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், அவர் உயிருடன் இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நம்புகிறார். இந்நிலையில் மோஜ்தபா காமேனி மற்றும் ஈரானின் இஸ்லாமிக் புரட்சிப் படையுடன் தொடர்புடைய தலைவர்கள் பற்றி தகவல் அளிப்போருக்கு 10 மில்லியன் டாலர் (ரூ.92,47,48,000) பரிசு அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதில் அயத்துல்லாவுக்கு துணையாக இருந்த மத குரு அலி அஸ்கார் ஹிஜாசி, ராணுவ கமாண்டர் யஹ்யா ரகிம், அரசியல் தலைவர் அலி லாரிஜானி, உளவுத்தறை அமைச்சர் இஸ்மாயில் காதிப், பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட சில அதிகாரிகளின் பெயர்களும் உள்ளன.