உலகம்

ரஷ்யாவில் 2 தூதரகங்கள்: அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திறந்து வைத்தார்

செய்திப்பிரிவு

மாஸ்கோ: ரஷ்​யா​வில் இந்​தி​யா​வின் 2 புதிய துணைத் தூதரகங்​களை வெளி​யுறவு அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர் நேற்று திறந்து வைத்​தார்.

வெளி​யுறவு அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர் ரஷ்​யா​வில் பயணம் மேற்கொண்​டுள்​ளார். இந்​நிலை​யில் ரஷ்​யா​வில் யெகாடெரின்​பர்க், கசான் ஆகிய நகரங்​களில் இந்​தி​யா​வின் 2 புதிய துணைத் தூதரகங்​களை அவர் நேற்று திறந்து வைத்​தார்.

இந்​நிகழ்ச்​சி​யில் அவர் பேசுகை​யில், “இரண்டு புதிய தூதரகங்​கள் திறக்​கப்​படு​வ​தால் இந்​தி​யா-ரஷ்யா உறவு​கள் மேலும் வலுப்பெறும் என நம்​பு​கிறேன். எங்​கள் உறவில் நிச்​சய​மாக ஒரு புதிய கட்​டத்தை இது குறிக்​கும். இரு நாடு​கள் இடையே தொழில்​நுட்​பம், அறி​வியல், பொருளா​தா​ரம் மற்​றும் வர்த்தக ஒத்துழைப்பை மேம்​படுத்த புதிய தூதரகங்​கள் உதவும். மேலும் ரஷ்​யா​வில் உள்ள இந்​திய சமூகத்​திற்கு சேவை​யாற்​றும்” என்​றார்.

சைபீரி​யா​வுக்​கான நுழை​வாயி​லாக யெகாடெரின்​பர்க் உள்​ளது. ரஷ்​யா​வின் மூன்​றாவது தலைநகர​மாக இது கருதப்​படு​கிறது. கனரக பொறி​யியல், ரத்​தின கற்​கள் வெட்​டு​தல், பாது​காப்பு தளவாட உற்​பத்​தி, உலோகப் பொருட்​கள், அணு எரிபொருள், ரசாயனங்​கள் மற்​றும் மருத்​துவ உபகரணங்​களுக்கு இப்​பகுதி பெயர் பெற்​றது.

அமைச்​சர் ஜெய்​சங்​கர் நேற்று முன்​தினம் ரஷ்ய அதிபர் புதினை சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது பிரதமர் மோடி​யின் வாழ்த்துகளை தெரி​வித்​தார்.

இந்​தி​யா - ரஷ்யா இடையி​லான வருடாந்​திர உச்சி மாநாடு அடுத்த மாதம் டெல்லியில் நடை​பெற உள்​ளது. இதற்​கான ஏற்​பாடு​கள் குறித்தும், பிராந்​திய மற்​றும் உலகளா​விய முன்​னேற்​றங்​கள் குறித்தும் அதிபர் புதினுடன் ஆலோசித்​த​தாக​​ அமைச்சர் ஜெய்​சங்​கர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT