மேஜர் அபிலாஷா பராக்​

 
உலகம்

ஐ.நா. அமைதிப் படையில் உயிர்த் தியாகம் செய்த 2 இந்திய வீரர்களுக்கு உயரிய விருது

செய்திப்பிரிவு

நியூயார்க்: ஐ.​நா. அமை​திப் படை​யில் பணி​யாற்றி உயிர்த்தியாகம் செய்த 2 இந்​திய வீரர்​களுக்கு உயரிய விருது அறிவிக்​கப்​பட்டு உள்​ளது.

கடந்த 1948-ம் ஆண்​டில் ஐ.நா. அமை​திப் படை தொடங்​கப்​பட்​டது. ஐ.நா. சபை​யின் 120 உறுப்பு நாடு​களை சேர்ந்த 97,000 வீரர்​கள் அமை​திப் படை​யில் பணி​யாற்றி வரு​கின்​றனர். சமீபத்​திய புள்​ளி​ விவரத்​தின்​படி சுமார் 5,000 இந்​திய வீரர்​கள் ஐ.நா. அமை​திப் படை​யில் உள்​ளனர். உள்​நாட்​டுப் போரால் பாதிக்​கப்​பட்டு உள்ள காங்​கோ​வில் ஐ.நா. அமை​திப் படை முகாமிட்டு உள்​ளது.

அந்த நாட்​டில் பணி​யாற்​றிய இந்​திய வீரர் ஹர்​பஜன் சிங் அமைதிப் பணி​யின்​போது உயி​ரிழந்​தார். இதே​போல ஐ.நா. அமைதிப் படை சார்​பில் தெற்கு சூடானில் பணி​யில் ஈடுபட்டிருந்த இந்​திய வீரர் சுஜித் குமார் பிர​தான் உயி​ரிழந்​தார். ஆண்​டு ​தோறும் மே 29ம் தேதி ஐ.நா. அமை​திப் படை தின​மாக கொண்​டாடப்​பட்டு வரு​கிறது. இந்த தினத்தை முன்​னிட்டு ஐ.நா. அமை​திப் படை​யில் உயி​ரிழந்த வீரர்​களுக்கு “டாக் ஹம்​மர்​ஸ்க்​ஜோல்ட் பதக்​கம்” என்ற உயரிய விருது வழங்​கப்​படு​கிறது.

இந்த ஆண்டு ஐ.நா. அமை​திப் படை தினத்தை முன்​னிட்டு வீரமரணம் அடைந்த இந்​திய வீரர்​கள் ஹர்​பஜன் சிங், சுஜித் குமார் பிர​தான் ஆகியோ​ருக்கு “டாக் ஹம்​மர்​ஸ்க்​ஜோல்ட் பதக்கம்” அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. இந்​திய பெண் அதி​காரிக்கு விருது ஐ.நா. அமை​திப் படை​யில் உள்ள இந்​திய ராணுவ பெண் அதி​காரி மேஜர் அபிலாஷா பராக், லெப​னானில் முகாமிட்டு உள்ளார். அங்கு பெண்​களின் பாது​காப்​பு, முன்​னேற்​றத்​துக்​காக அவர் பல்​வேறு நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறார்.

அவரது சேவையை கவுரவிக்​கும் வகை​யில், “மிலிட்​டரி ஜென்​டர் அட்​வகேட் ஆப் தி இயர்” விருது அபிலாஷா பராக்​குக்கு அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. சபை​யின் தலைமை அலு​வல​கத்​தில் விரைவில் நடை​பெற உள்ள விழா​வில் இந்​தி​யர்​கள் உட்பட 59 பேருக்கு ஐ.நா. சபை பொதுச்​செய​லா​ளர் அந்​தோணியோ குத்தேரஸ் விருதுகளை வழங்க உள்​ளார். உயி​ரிழந்த இந்​திய வீரர்கள் சார்​பில் அவர்​களின் குடும்​பத்​தினர் விருதுகளை பெற்றுக் கொள்​வார்​கள்.

SCROLL FOR NEXT