உலகம்

ட்ரம்ப் - ஜி ஜின்பிங் இன்று சந்திப்பு: வர்த்தகம் குறித்து அமெரிக்கா - சீனா முக்கிய ஆலோசனை

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: உல​கின் இரு பெரும் பொருளா​தார நாடு​களின் தலை​வர்​களான அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்​றும் சீன அதிபர் ஜி ஜின்​பிங் இடையே​யான வரலாற்​றுச் சிறப்​புமிக்க சந்​திப்பு பெய்​ஜிங்​கில் இன்று நடை​பெறுகிறது.

தைவானுக்கு ஆயுத விநி​யோகம், ஈரான் விவ​காரம் மற்​றும் இருதரப்பு வர்த்தக உறவு​கள் உள்​ளிட்ட சிக்​கலான விவ​காரங்​கள் குறித்து இந்த சந்​திப்​பின்​போது ஆலோசிக்​கப்பட உள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மே 13 முதல் 15 வரை சீனா​வில் அரசு​முறைப் பயணம் மேற்​கொள்​கிறார். கடந்த பத்​தாண்​டு​களில் அமெரிக்க அதிபர் ஒரு​வர் சீனா​வுக்​குப் பயணம் மேற்​கொள்​வது இதுவே முதல்முறையாகும்.

வியாழன் (இன்​று) மற்​றும் வெள்​ளிக்​கிழமை​களில் அதிபர் ஜி ஜின்பிங்​குடன் ட்ரம்ப் உயர்​மட்ட ஆலோ​சனை​களை நடத்துகிறார். அவருக்​குச் சிறப்​பான வரவேற்பு அளிக்​கப்பட உள்ளது. பெய்​ஜிங் புறப்​படு​வதற்கு முன்​பாக வெள்ளை மாளிகையில் செய்​தி​யாளர்​களிடம் ட்ரம்ப் பேசுகை​யில், “ஈரான் விவ​காரம் குறித்து ஜி ஜின்​பிங்​குடன் விரி​வாக ஆலோ​சிக்க உள்ளேன். இருப்​பினும், ஈரான் விவ​காரத்​தில் சீனா​வின் உதவி தேவை என்று நான் கருத​வில்​லை.

அமைதி வழி​யிலோ அல்​லது வேறு வழி​யிலோ எங்​களால் வெற்றி பெற முடி​யும். போர் நிறுத்​தத்​திற்​கான முயற்​சிகள் குறித்து சீன அதிபர் அக்​கறை காட்​டு​வார் என நம்​பு​கிறேன்" என்​றார். சீனாவுடனான பேச்​சு​வார்த்​தை​யில் தைவான் விவ​காரம் முக்​கிய இடம்​பிடிக்​கும் என்று அமெரிக்க வெளி​யுறவுத் துறை அமைச்​சர் மார்கோ ரூபியோ உறு​திப்​படுத்​தி​யுள்​ளார்.

தைவான் விவ​காரத்​தால் இரு நாடு​களுக்கு இடையே புதிய மோதல்​கள் ஏற்​படு​வதைத் தவிர்ப்​பதே இந்த பேச்​சு​வார்த்​தை​யின் முக்​கிய நோக்​க​மாக இருக்​கும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுத​விர, சீனா அரிய வகை கனிமங்​களின் ஏற்​றும​திக்கு விதித்துள்ள கட்​டுப்​பாடு​கள் மற்​றும் இருதரப்பு வர்த்தக உறவு​கள் குறித்​தும் விவா​திக்​கப்பட உள்​ளது.

நேட்டோ கூட்​டமைப்பு நாடு​கள் ஈரான் போரில் பங்​கேற்க மறுத்ததால், அந்த அமைப்​பிலிருந்து வெளி​யேறு​வ​தாக ட்ரம்ப் மிரட்​டல் விடுத்​துள்​ளார். இது பாரம்​பரிய நட்பு நாடு​களு​ட​னான உறவில் விரிசலை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதன் விளை​வாக, அமெரிக்கா​வும் சீனா​வும் இணைந்து உலக விவ​காரங்​களை வழிநடத்​தும் ‘ஜி-2' எனும் புதிய அரசி​யல் கோட்​பாடு வலுப்​பெறத் தொடங்​கி​யுள்​ளது. பாகிஸ்​தான் மூல​மாக ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வர சீனா திரைமறைவு முயற்​சிகளை மேற்​கொண்டு வரும் நிலை​யில்​, இந்​தச்​ சந்​திப்​பு உலக நாடு​களால்​ உன்​னிப்​பாக கவனிக்​கப்​படுகிறது.

SCROLL FOR NEXT