உலகம்

ட்ரம்ப், புதின், ஜி ஜின்பிங் நவ.19-ல் சந்திப்பு: அணு ஆயுதங்களை குறைப்பது குறித்து முக்கிய ஆலோசனை

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்​பிங் ஆகியோர் நவம்​பர் 19-ம் தேதி முத்​தரப்பு பேச்சு​வார்த்தை நடத்த உள்​ளனர். அப்​போது அணு ஆயுதங்​களை குறைப்​பது குறித்து 3 தலை​வர்​களும் முக்​கிய ஆலோ​சனை நடத்​து​வார்​கள் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

ஆசிய பொருளாதார ஒத்​துழைப்பு அமைப்​பில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்​பான், கனடா, தென்​கொரியா, மலேசியா, சிங்​கப்​பூர், இந்​தோ​னேசியா, ஆஸ்திரேலியா உள்​ளிட்ட 21 நாடுகள் இடம் பெற்று உள்​ளன. இந்த அமைப்​பின் இரு நாள் உச்சி மாநாடு சீனாவின் குவாங்​டாங் மாகாணம், ஷென்​சென் நகரில் நாளை தொடங்​கு​கிறது. இதில் உறுப்பு நாடுகளின் தலை​வர்​கள் பங்​கேற்க உள்​ளனர்.

மாநாட்​டின் ஒரு பகுதி​யாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்​ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடி​மிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்​பிங் ஆகியோர் நவம்​பர் 19-ம் தேதி முத்​தரப்பு பேச்சு​வார்த்தை நடத்த உள்​ளனர். அப்​போது அணு ஆயுதங்​களைக் குறைப்​பது குறித்து 3 தலை​வர்​களும் முக்​கிய ஆலோ​சனை நடத்​து​வார்​கள் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

அமெரிக்கா, ரஷ்யாவிடம் தலா 5,000 அணு குண்​டுகள் இருப்பதாகக் கணக்​கிடப்​பட்டு உள்​ளது. சீனாவிடம் சுமார் 600 அணு குண்​டுகள் இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. கடந்த 1996-ம் ஆண்​டில் விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்​பந்​தம் கையெழுத்தானது. இதில் அமெரிக்கா, ரஷ்யா உட்​பட 191 நாடுகள் கையெழுத்​திட்டு உள்​ளன. உக்​ரைன் போர் விவகாரம் காரணமாக இந்த ஒப்​பந்​தத்​தில் இருந்து வெளியேறு​வோம் என்று ரஷ்யா அடிக்​கடி எச்​சரிக்கை விடுத்து வரு​கிறது.

அமெரிக்கா, ரஷ்யா இடையே கடந்த 2010-ம் ஆண்​டில் புதிய அணு ஆயுத குறைப்பு ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. உக்​ரைன் போர் விவகாரத்​தால் இந்த ஒப்​பந்​தம் கடந்த பிப்​ரவரி​யில் காலாவதியானது. இத​னால் அமெரிக்கா, ரஷ்யா இடையே மீண்டும் அணு ஆயுத போட்டி உரு​வாகும் என்று அஞ்​சப்​படு​கிறது. தற்​போது உல​கின் பல்​வேறு பகுதி​களில் போர் நடை​பெற்று வருகிறது. குறிப்​பாக ரஷ்யா - உக்​ரைன் போர், அமெரிக்கா - ஈரான் போர் மிக நீண்ட காலமாக நீடித்து வரு​கிறது.

மேலும் தைவான் விவகாரத்​தில் சீனா, அமெரிக்கா இடையே மோதல் போக்கு நீடிக்​கிறது. இந்த சூழலில் அமெரிக்க, ரஷ்ய, சீன அதிபர்​களின் முத்​தரப்பு பேச்சு​வார்த்தை சர்​வ​தேச அளவில் மிகுந்த முக்​கியத்​து​வம் பெற்று உள்​ளது. அணு ஆயுத குறைப்பு மட்டுமன்றி, ஈரான் போர், உக்​ரைன் போர் குறித்​தும் முத்​தரப்பு பேச்சு​வார்த்​தையில் விரிவான ஆலோ​சனை நடத்​தப்​படும் என்று தெரி​கிறது.

இது​தொடர்​பாக சீன வெளி​யுறவுத் துறை செய்​தித் தொடர்​பாளர் மாவோ நிங் நேற்று கூறும்​போது, “உலக அமைதி, ஸ்திரத்​தன்மை குறித்து 3 நாடுகளின் தலை​வர்​களும் முக்​கிய ஆலோ​சனை நடத்த உள்​ளனர். சர்​வ​தேச அளவில் எழுந்​துள்ள சவால்​கள் குறித்தும் கூட்​டத்​தில் விவாதிக்​கப்​படும். அமெரிக்கா, சீனா இடையே நில​வும் கருத்து வேறு​பாடுகளை களைவது குறித்​தும் ஆலோ​சிக்​கப்​படும்” என்​றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT