உலகம்

“நண்பர்களைப் பகைத்துக் கொண்டு எதிரிகளுக்குப் பணிந்து போகிறார் ட்ரம்ப்” - மெலோனி கடும் தாக்கு

செய்திப்பிரிவு

ரோம்: பி​ரான்​சில் நடை​பெற்ற ஜி7 மாநாட்​டில் பங்​கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இத்​தாலி டி.​வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘இத்​தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி என்​னுடன் போட்டா எடுக்​கக்கெஞ்​சி​னார். அவர் மீது பரி​தாபப்​பட்டு போட்டோ எடுத்​துக் கொண்​டேன்’’ என்​றார்.

இதற்கு பதில் அளித்த மெலோனி, ‘‘நட்பு நாடுகளின் தலைவர்களைப் பற்றி அவதூறு கருத்​துகளை ட்ரம்ப் கூறு​வது இது முதல் முறையல்ல. அவர் ஒரு விஷ​யத்தை நினை​வில் கொள்ள வேண்டும். நானும் இத்​தாலி​யும் ஒரு​போதும் கெஞ்​சுவ​தில்​லை’’ என பதிலடி கொடுத்​தார்.

இந்​நிலை​யில், சமீபத்​தில் அளித்த பேட்​டி​யில், ‘‘டிரம்ப் பொய் பேசுகிறார், தனது நண்​பர்​களைப் பகைத்​துக் கொண்டு எதிரிகளுக்​குப் பணிந்து போகிறார். அமெரிக்​கா​வில் நவம்​பர் மாத இடைக்​காலத் தேர்​தல் நெருங்கி வரு​கிறது. அதில் டிரம்ப் தனக்கு கிடைக்​கும் வாக்​கு​களைப் பார்க்க வேண்​டும்.

அவரது ஆதரவு புதிய உச்​சகட்ட சரிவைச் சந்​தித்​துள்​ளது’’ என கூறி அதிபர் ட்ரம்ப்பை வம்​புக்கு இழுத்​துள்​ளார். இது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்​புடன், ஒரு பெரிய சண்​டையை எதிர்​கொள்ள இத்தாலி பிரதமர் மெலோனி தயா​ராவதை காட்​டுகிறது.

SCROLL FOR NEXT