அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

 
உலகம்

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை கைவிட பரிசீலனை: ட்ரம்ப் தகவல்

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: ஈ​ரானுக்கு எதி​ரான ராணுவ நடவடிக்​கையை கைவிட பரிசீலித்து வரு​வ​தாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக சமூக வலை​தளத்​தில் அவர் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: மத்​திய கிழக்​கில் ஈரானின் தீவிர​வாத ஆட்​சி​யாளர்​களுக்கு எதி​ராக அமெரிக்க அரசு ராணுவ நடவடிக்​கையை மேற்​கொண்​டிருக்​கிறது. இதில் எங்​களது நோக்​கங்​கள் நிறைவேறி வரு​கின்​றன. எனவே ராணுவ நடவடிக்​கையை கைவிடு​வது குறித்து பரிசீலித்து வரு​கிறோம்.

          

ஈரானின் ஏவு​கணை உற்​பத்தி ஆலைகள், ஆயுத உற்​பத்தி ஆலைகள், அந்த நாட்​டின் கடற்​படை, விமானப் படைகளை அழித்​திருக்​கிறோம். எங்​களது தாக்​குதல்​களால் ஈரா​னால் இனிமேல் அணு ஆயுதங்​களை உற்​பத்தி செய்​யவே முடி​யாது. ஈரானின் அச்​சுறுத்​தல்​களை முழு​மை​யாக அழித்​து​விட்​டால் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் தானாகவே தடையற்ற கப்​பல் போக்​கு​வரத்து தொடங்​கி​விடும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

முன்னதாக செய்​தி​யாளர் சந்​திப்​பின்​போது, ஈரானுடன் போர் நிறுத்​தத்​துக்கு வாய்ப்​பில்லை. எங்​களது நோக்​கங்​கள் முழு​மை​யாக நிறைவேறிய பிறகே போர் நிறுத்​தம் அமலுக்கு வரும் என்று ட்ரம்ப் தெரி​வித்​தார். அடுத்த சில மணி நேரங்​களில் ஈரானுக்கு எதி​ரான ராணுவ நடவடிக்​கையை கைவிடு​வது குறித்து பரிசீலிப்ப​தாக சமூக வலை​தளத்​தில் அவர் கூறி​யுள்​ளார். ட்ரம்​பின் மாறு​பட்​ட கருத்​துகளால்​ தொடர்ந்​து குழப்​பம்​ நீடிக்​கிறது.

SCROLL FOR NEXT