உலகம்

“சரண் அடையுங்கள் அல்லது மரணம் நிச்சயம்” - ஈரான் ராணுவத்துக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று கூறிய​தாவது:

அமெரிக்​காவை அழிப்​போம் என்று கடந்த 47 ஆண்​டு​களாக ஈரான் அரசு கூறி வரு​கிறது. ஈரானில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்ட காலத்​தில் டெஹ்​ரானில் உள்ள அமெரிக்க தூதரகம் சிறைபிடிக்​கப்​பட்​டது. அங்கு பணி​யாற்​றிய அமெரிக்க தூதரக அலு​வலர்​கள் 444 நாட்​கள் பிணை​யக் கைதி​களாக வைக்​கப்​பட்​டனர்.

          

இதன்​பிறகு 1983-ம் ஆண்​டில் பெய்​ரூட்​டில் ஈரானின் பினாமி படைகள் மிகப்​பெரிய தாக்​குதலை நடத்​தின. இதில் 241 அமெரிக்க வீரர்​கள் உயி​ரிழந்​தனர். கடந்த 2000-ம் ஆண்​டில் இராக்​கில் ஈரானிய படைகள் நடத்​திய தாக்​குதலில் நூற்​றுக்​கணக்​கான அமெரிக்க வீரர்​கள் உயி​ரிழந்​தனர்.

கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் தேதி ஈரானின் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்​பு, இஸ்​ரேலில் மிகப்​பெரிய தாக்​குதல்​களை நடத்​தி​யது. இதில் 46 அமெரிக்​கர்​கள் உட்பட 1,000 பேர் உயி​ரிழந்தனர். உலகின் தீவிர​வாத மைய​மாக ஈரான் உரு​வெடுத்து உள்​ளது. அண்​மை​யில் ஈரான் அரசுக்கு எதி​ராக போராடிய ஆயிரக்​கணக்​கான மக்​களை அந்த நாட்டு ராணுவம் கொன்று குவித்​தது. அணு ஆயுத திட்​டத்தை கைவிட அந்த நாடு மறுக்​கிறது.

அமெரிக்​கா​வின் பாது​காப்​புக்கு ஈரான் மிகப்​பெரிய அச்​சுறுத்​தலாக நீடிக்​கிறது. இந்த அச்​சுறுத்​தலை முறியடிக்​கவே தற்​போது அந்த நாடு மீது தாக்​குதல் தொடுக்​கப்​பட்டு இருக்​கிறது.

இந்த நேரத்​தில் ஈரான் ராணுவ வீரர்​கள், குறிப்​பாக அந்த நாட்​டின் இஸ்​லாமிய புரட்​சிகர காவல் படை வீரர்​களுக்கு ஓர் எச்​சரிக்​கையை விடுக்​கிறேன். உங்​கள் ஆயுதங்​களை கைவிட்டு சரண் அடை​யுங்​கள். இல்​லை​யெனில் நீங்​கள் நிச்​சய​மாக மரணத்தை சந்​திக்க நேரிடும். ஈரானின் அனைத்து ஏவு​கணை​களும் முழு​மை​யாக அழிக்​கப்​படும்.

ஈரான் மக்​களுக்கு ஓர் அழைப்பு விடுக்​கிறேன். எங்​கள் பணியை விரை​வில் முடிப்​போம். அதன்​பிறகு அரசு நிர்​வாகம் உங்​கள் வசமாகும். இவ்​வாறு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT