உலகம்

16 வயதிலேயே சிஏ பட்டம் பெற்று சாதனை படைத்த மாணவன்

செய்திப்பிரிவு

துபாய்: 16 வயதில் உலகின் மிக இளைய ‘சாட்​டர்ட் அக்கவுண்டன்ட்’ (சிஏ) பட்​டம் பெற்று துபாயைச் சேர்ந்த லக்ஷ்மணன் மெய்​யப்​பன் கின்னஸ் சாதனை படைத்​துள்​ளார்.

கோவிட்​-19 லாக்​ட​வுன் காலத்​தில் தனது 10-ம் வகுப்பு பொதுத்​தேர்வை முடித்த லக் ஷ்மணன் மெய்​யப்​பனுக்​கு, ஏசிசிஏ (சர்வதேச கணக்​கியல் தொழில்​முறை படிப்​பு) தகு​திபெற்ற அவரது தாயார் மூலம் கணக்​கியலின் அடிப்​படை கருத்​துகள் அறிமுக​மாகி, நிதித்​துறை​யில் ஆர்​வம் ஏற்​பட்​டது.இதனைத் தொடர்ந்​து, தனது 15-வது வயதில் ஏசிசிஏ படிக்​கத் தொடங்​கி, அதை ஒரே ஆண்​டுக்குள் வெற்​றிகர​மாக முடித்​தார்.

அதன்​பின்​னர், தனது 16 வயது 141 நாட்​களில் ‘சாட்​டர்ட் அக்​க​வுண்​டன்ட்’ தகு​தி​யைப் பூர்த்தி செய்​ததன் மூலம், உலகின் மிக இளைய ஆண் சாட்​டர்ட் அக்​க​வுண்​டன்ட் என்ற கின்​னஸ் உலக சாதனையை துபா​யில் இவர் எட்​டி​னார். அந்த சாதனையைத் தாண்​டி​யும் தனது கல்​விப் பயணத்​தைத் தொடர்ந்த லக் ஷ்மணன், அடுத்​த​தாக சிஎப்ஏ (பட்டய நிதி ஆய்​வாளர்) பட்​டத்​தை​யும் பெற்று, தற்​போது நிதித்​துறை​யில் முதுகலை அறி​வியல் (MSc in Finance) படிப்​பைப் பயின்று வரு​கிறார்.

இத்​துடன் நிறுத்​தி​வி​டா​மல், தற்​போது துபா​யில் உள்ள ‘சென்​சுரி பைனான்​ஷியல்’ நிறு​வனத்​தில் முது​நிலை ஆராய்ச்சி ஆய்வாளராகப் பணி​யாற்றி வரும் இவர், முதலீடு​கள், சந்தை ஆராய்ச்சி மற்​றும் நிதி சார்ந்த முடிவு​களை எடுக்​கும் பணிகளைக் கவனித்து வரு​கிறார். கல்வி மற்​றும் நிதித்​துறைக்கு அப்​பாற்​பட்​டு, ஓய்வு நேரங்​களில் கடி​காரங்​களை வடிவ​மைப்பு செய்து உருவாக்குவதிலும் இவர் ஆர்​வம் காட்டி வரு​கிறார்.

இந்த மைல்கல் முக்கியம்

தனது கின்​னஸ் சாதனை குறித்​துப் பேசிய லக் ஷ்மணன், “இந்த மைல்​கல் எனக்கு மிக​வும் முக்​கிய​மானது; ஆனால் தகு​தி​களைப் பெறு​வதை நான் ஒரு போட்​டி​யாகப் பார்க்​க​வில்​லை. நிஜ உலகப் பொருளா​தா​ரத்​தை​யும், நிதி அமைப்​பு​களை​யும் புரிந்​து​கொள்​வதே முதன்​மை​யானது” என்று தெரி​வித்​துள்​ளார்.

பள்​ளிப் படிப்​பிற்​குப் பின் வழக்​க​மான படிப்​பு​களைத் தாண்​டி, தொழில்​முறைப் படிப்​பு​கள் மூலம் வெற்​றி​பெற விரும்​புவோருக்கு இவரது பயணம்​ ஒரு நல்​ல முன்​மா​திரி​யாகும்​.

SCROLL FOR NEXT