ஆனந்த விஜேபால

 
உலகம்

2019 ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு முன்னாள் உளவு தலைவர் காரணம்: இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

கொழும்பு: கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் 279 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தத் தாக்குதலை இலங்கையின் முன்னாள் உளவுத்துறை தலைவர் (எஸ்ஐஎஸ்) மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லேதான் திட்டமிட்டு வழி நடத்தினார் என்று அந்நாட்டின் பொது மக்கள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டி உள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட சல்லே, இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் இணைந்து சதி செய்து, அவர்கள் தாக்குதல் நடத்த வேண்டிய கத்தோலிக்க தேவாலயத்தையும் அடையாளம் காட்டியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT