உலகம்

தென் ஆப்பிரிக்காவில் கோயில் இடிந்து இந்தியர் உட்பட 4 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்​பிரிக்​கா​வில் கட்​டப்​பட்டு வரும் கோயில் இடிந்து விழுந்​த​தில், இந்​திய வம்​சாவளியை சேர்ந்​தவர் உட்பட 4 பேர் உயி​ரிழந்​தனர்.

தென் ஆப்​பிரிக்​கா​வின் கவாஸுலு நேட்​டால் மாகாணத்​தில், தெக்வினி (டர்​பன்) பகு​தி​யின் வடக்​கில் மலை மீது, அகோபிலம் கோயில் கட்​டு​மானப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இங்கு கடந்த வெள்​ளிக்​கிழமை தொழிலா​ளர்​கள் கட்​டு​மானப் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

அப்​போது திடீரென கட்​டு​மானம் இடிந்து விழுந்​த​தில் 52 வயது இந்​திய வம்​சாவளியை சேர்ந்​தவர் உட்பட 4 பேர் உயி​ரிழந்​தனர். இடி​பாடு​களில் மேலும் சிக்​கி​யிருக்​கலாம் என்று அஞ்​சப்​படு​கிறது. அந்​தப் பகு​தி​யில் மீட்​புப் பணி​கள் தொடர்ந்து நடை​பெற்று வரு​கின்​றன. இறந்​தவர்​களில் ஒரு​வர் விக்கி ஜெய்​ராஜ் பாண்டே என்று அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளது. இவர் கோயில் அறக்கட்டளையின் உறுப்​பின​ராக​வும், கட்​டு​மான திட்​டத்​தின் மேலா​ள​ராகவும் இருந்​துள்​ளார்.

இந்த கோயில் குகை போல வடிவ​மைக்​கப்​பட்ட திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதற்​கான கற்​கள் இந்​தி​யா​வில் இருந்து கொண்டு வரப்பட்டன. இதற்​கிடை​யில், கோயில் கட்​டு​மானத்​துக்கு அனு​மதி எது​வும் பெற​வில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெக்​வினி நகராட்சி அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT