கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நேற்று உலக நாடோடிகள் விளையாட்டுப் போட்டி தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் ஒரே காரில் சென்றனர்.

 
உலகம்

தொடங்கியது ஷாங்காய் மாநாடு: மோடி, புதின், ஜி ஜின்பிங் பங்கேற்பு

செய்திப்பிரிவு

பிஷ்கெக்​: கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்கெக்​கில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாடு நேற்று தொடங்​கியது. இதில் இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்​பிங் பங்​கேற்றனர்.

ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்பு (எஸ்​சிஓ) கூட்​டமைப்​பில் சீனா, ரஷ்​யா, இந்​தி​யா, உஸ்​பெகிஸ்​தான், கிர்​கிஸ்​தான், ஈரான், பெலாரஸ், கஜகஸ்​தான், பாகிஸ்​தான், தஜிகிஸ்​தான் ஆகிய நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்​ளன. இந்த கூட்​டமைப்​பின் உச்சி மாநாடு கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்கெக்​கில் நேற்று தொடங்​கியது. இதில் இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்​பிங் உட்பட உறுப்பு நாடு​களின் தலை​வர்​கள் பங்​கேற்று உள்​ளனர்.

மாநாட்​டின் ஒரு பகு​தி​யாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கி​யான், கிர்​கிஸ்​தான் அதிபர் சாதிர் ஜபரோவ், அர்​மீனியா பிரதமர் நிகோல் பாஷின்​யான் ஆகியோரைப் பிரதமர் மோடி நேற்று தனித்​தனி​யாக சந்​தித்​துப் பேசி​னார்.

மோடி - புதின் சந்​திப்பு: இதைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நேற்​றிரவு அவர் சந்​தித்து முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். அப்​போது பிரதமர் மோடி கூறிய​தாவது: இந்​தியா - ரஷ்யா இடையி​லான உறவு தனித்​து​வ​மானது, சிறப்​புமிக்​கது. இரு நாடு​களின் நட்​புறவு புதிய உச்​சத்தை எட்​டி​யிருக்​கிறது. உக்​ரைன் போருக்கு முற்​றுப்​புள்ளி வைக்க வேண்​டும் என்று இந்​தியா விரும்​பு​கிறது.

ரஷ்​யா​வும் உக்​ரைனும் அமை​திக்​கான முயற்​சிகளைத் தொடங்க வேண்​டும். மனித குலத்​துக்கு புதிய நம்​பிக்​கையை ஏற்​படுத்த வேண்​டும். முடிவில்லாத போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அதற்கான நேரம் வந்து விட்டது. இந்த விவ​காரத்​தில் உதவ இந்​தியா தயா​ராக உள்​ளது.

செப்​டம்​பர் 12, 13-ம் தேதி​களில் இந்​திய தலைநகர் டெல்​லி​யில் பிரிக்ஸ் கூட்​டமைப்​பின் உச்சி மாநாடு நடை​பெறுகிறது. இதில் பங்​கேற்க ரஷ்ய அதிபர் புதினுக்​குச் சிறப்பு அழைப்பு விடுக்​கிறேன். இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறுகையில், ‘‘ரஷ்யா - இந்​தியா இடையி​லான உறவை மேம்​படுத்த பிரதமர் மோடி தனிக்​கவனம் செலுத்தி வரு​கிறார். இதற்​காக அவரை மனதா​ரப் பாராட்​டு​கிறேன்’’ என்றார்.

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் 6-வது உலக நாடோடிகள் விளையாட்டுப் போட்டி தொடங்கியது. இதில் பங்கேற்க பிரதமர் மோடியும் அதிபர் புதினும் ஒரே காரில் சென்றனர். தொடக்க விழா மேடைக்கு இருவரும் ஒன்றாக நடந்து சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

எஸ்​சிஓ மாநாட்டில் இன்​று சீன அதிபர் ஜி ஜின்​பிங்​கைப் பிரதமர் மோடி​ சந்​தித்​துப்​ பேசு​வார்.

SCROLL FOR NEXT