உலகம்

வங்கதேச புதிய அதிபராக ஆலம்கீர் தேர்வு

செய்திப்பிரிவு

டாக்கா: வங்​கதேசத்​தின் புதிய அதிப​ராக ஆளும் வங்​கதேச தேசி​ய​வாதக் கட்​சி​யின் (பிஎன்​பி) மூத்த தலை​வர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் நேற்று தேர்வு செய்​யப்​பட்​டார்.

வங்​கதேச நாடாளு​மன்​றத்​தில் 23-வது புதிய அதிபரை தேர்ந்​தெடுப்​ப​தற்​கான வாக்​கெடுப்பு நேற்று நடை​பெற்​றது. மொத்​தம் 349 நாடாளு​மன்ற உறுப்​பினர்​கள் வாக்​களிக்க தகு​திபெற்​றிருந்த இந்த தேர்​தலில் 343 உறுப்​பினர்​கள் தங்​களது வாக்​கு​களை செலுத்​தினர். நேற்று பிற்​பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடை​பெற்ற இந்த தேர்​தலில் ஆளும் தரப்​பில் மிர்சா ஃபக்​ருல் இஸ்​லாம் ஆலம்​கீர் மற்​றும் எதிர்க்​கட்சி கூட்​ட​ணி​யின் வேட்​பாள​ரும் ஓய்​வு​பெற்ற ராணுவ அதி​காரி​யு​மான ஒலி அகமது ஆகியோர் போட்​டி​யிட்​டனர்.

இதில் ஆலம்​கீர் 255 வாக்​கு​களைப் பெற்று வெற்றி பெற்​றார். ஒலி அகமது 88 வாக்​கு​களை மட்​டுமே பெற்று தோல்​வியடைந்​த​தாக தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஏ.எம்​.எம். நசீர் உத்​தீன் அதி​காரபூர்​வ​மாக அறி​வித்​தார்.

வங்​கதேசத்​தின் புதிய அதிப​ராக தேர்வு செய்​யப்​பட்​டுள்ள 78 வயதான ஆலம்​கீர் இன்று (ஆகஸ்ட் 21) பொறுப்​பேற்​பார் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

கடந்த 35 ஆண்​டு​களில் அந்​நாட்டு தேர்​தலில் ஒன்​றுக்​கும் மேற்​பட்ட வேட்​பாளர் அதிபர் தேர்​தலில் போட்​டி​யிட்​டது இதுவே முதல் முறை என்று கூறப்​படு​கிறது. முன்​னர் நடை​பெற்ற அதிபர் தேர்​தல்​களில் எதிர்க்​கட்​சிகள் வேட்​பாளர்​களை நிறுத்​த​வில்​லை.

வங்​கதேசத்​தில் கடந்த 1991-ம் ஆண்​டுக்​குப் பிறகு போட்​டி​யுடன் நடை​பெற்ற முதல் அதிபர் தேர்​தல் இது​வாகும். இதற்கு முன்பு கடந்த பல ஆண்​டு​களாக அதிபர் பதவிக்​கான தேர்​தல்​கள் பெரும்​பாலும் போட்​டி​யின்றி அல்​லது ஒரு​மித்த கருத்​தின் அடிப்படையில் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT