கீவ்: ரஷ்யாவும் உக்ரைனும் 2022 பிப்ரவரி முதல் போரிட்டு வருகின்றன. இதில் ஏராளமானோார் உயிரிழந்தனர். இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா நேற்று முன்தினம் இரவு கடும் தாக்குதல் நடத்தியது.
இதுகுறித்து உக்ரைன் அதிகாரிகள் நேற்று கூறுகையில், “36 ஏவுகணைகள், 242 டிரோன்களை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கீவ் நகரில் 4 பேர் இறந்தனர். 22 பேர் காயம் அடைந்தனர்” என்றனர். இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.