உலகம்

பினான்ஸ் நிறுவனத்தில் நடந்த ரூ.60,000 கோடி கொள்ளை: வட கொரியாவில் இளம் சிறார்களைக் கொண்ட ஹேக்கிங் படையே காரணம்

புதிய தகவல்கள் வெளியீடு

செய்திப்பிரிவு

பியோங்யாங்: பினான்ஸ் நிறு​வனத்​தில் ரூ.60 ஆயிரம் கோடி கொள்ளை போனதற்கு வட கொரியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள்​தான் காரணம் என்று கூறப்​படு​கிறது. பிரபல கிரிப்டோ கரன்ஸி நிறு​வனமான பினான்ஸ் கணக்​கு​களி​லிருந்து 6.3 பில்​லியன் டாலர்(ரூ.60,000 கோடி) கிரிப்டோ சொத்​துகள் கடந்தவாரம் ஹேக் செய்​யப்​பட்டு திருடப்​பட்​டன.

இந்​நிலை​யில், கிரிப்டோ கரன்​சி​யைத் திருடுவது உள்​ளிட்ட இணைய வழிக் குற்​றங்​களுக்​காக சிறு​வர்​களை இளம் வயதிலேயே வட கொரியா தயார்​படுத்தி வரு​வ​தாகக் கூறப்படுகிறது. இளம் வயதிலேயே திறமையான சிறு​வர்​களைக் கண்டறிந்து, அவர்​களுக்கு சைபர் தொழில்​நுட்​பத்​தில் பயிற்சி அளிக்​கப்​படு​கிறது. அவர்களுக்கு ரொக்​கப்பணம், ஆடம்​பர அடுக்குமாடி குடி​யிருப்​பு​கள், சலுகைகளை வழங்கி, பயிற்சிபெற்ற ஹேக்​கர்​களின் படையை வட கொரியா உருவாக்கி​யுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.

இதன்மூலம் இணை​யக் குற்​றங்​களில் அந்​நாடு ஒரு முக்​கிய சக்தியாக உரு​வெடுக்க உதவியுள்​ளது. அமெரிக்​காவைச் சேர்ந்த ஃபெடரல் புலனாய்வு அமைப்பு(எப்​பிஐ) மற்​றும் கிரிப்​டோகரன்சி பரிவர்த்​தனை நிறு​வனமான பினான்ஸ் ஆகியவை இந்த ரூ.60 ஆயிரம் கோடி திருட்​டுக்கு வட கொரிய அரசைக் குற்​றம் சாட்டியுள்​ளன. ஆனால், இந்​தக் குற்​றச்​சாட்​டுகள் அனைத்​தையும் வட கொரிய அரசு மறுத்​துள்​ளது.

ஹேக்​கர்​கள் உரு​வாவது எப்​படி?

இதனிடையே, வட கொரியாவின் சைபர் திட்​டத்​தில் திறமையான சிறு​வர்​கள் அவர்​கள் பள்​ளி​யில் படிக்​கும்​போது தேர்வு செய்​யப்​படுவ​தாகத் தெரிய​வந்​துள்​ளது. கணினி அறி​வியல் படிப்​ப​தற்​காக, வட கொரிய அரசு ஒவ்​வொரு ஆண்​டும் சுமார் 150 முதல் 200 திறமையான மாணவர்​களை, அவர்​கள் 11, 12 வயதுடைய​வர்​களாக இருக்​கும்​போதே, தேர்ந்​தெடுப்​ப​தாகக் கூறப்​படு​கிறது.

அவர்​கள் 17 வயதிலேயே நாட்​டின் முன்​னணி பல்​கலைக்கழகங்களுக்கு உயர் கல்​விக்​காக அனுப்​பப்​படு​கின்​றனர் என்று கிம் ஹியுங் குவாங் தெரி​வித்​துள்​ளார். இவர் வட கொரியாவி​லிருந்து, 2004-ல் தென் கொரியா​வுக்​குத் தப்​பிச் செல்வதற்கு முன்பு அரசு ஹேக்​கர்​களுக்​குப் பயிற்சி அளித்த பிரிவி​லிருந்து தப்பி வந்​தவர்.

அவர் மேலும் கூறும்​போது, “இந்த திறமையாளர்​கள் வட கொரிய அதிபர் கிம் ஜாங் கின் ரகசிய ஆயுதங்​களில் ஒன்றாக செயல்​படு​கின்​றனர். இதுபோன்று ஹேக்கர்​களை வட கொரியா தவிர வேறு எந்த நாடும் உருவாக்குவது இல்லை” என்​றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT