உலகம்

இந்தோனேசிய சாலை விபத்தில் 16 பயணிகள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

ஜகார்த்தா: இந்​தோ​னேசி​யா​வின் பிர​தான ஜாவா தீவில் நேற்று அதி​காலை நிகழ்ந்த பேருந்து விபத்​தில் 16 பயணிகள் உயிரிழந்தனர்.

இந்​தோ​னேசிய தலைநகர் ஜகார்த்​தா​வில் இருந்து நாட்​டின் பழமை​யான யோக்​யகர்த்தா நகருக்கு ஒரு பேருந்து சென்று கொண்​டிருந்​தது. இதில் 34 பயணி​கள் இருந்​த​தாக கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில் நேற்று அதி​காலை​யில் மத்​திய ஜாவா​வின் செம​ராங் நகரில் உள்ள கிராப்​யாக் கட்​ட​ணச் சாலை​யில் ஒரு வளைவில் அந்​தப் பேருந்து திரும்​பும்​போது கான்​கிரீட் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்​தது.

இந்த விபத்​தில் 6 பயணி​கள் அதே இடத்​தில் உயி​ரிழந்​தனர். மேலும் 10 பேர் மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லும் வழி​யிலும் சிகிச்சை பலனின்​றி​யும் உயி​ரிழந்​தனர். அரு​கில் உள்ள 2 மருத்​து​வ​மனை​களில் 18 பேர் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இவர்​களில் 5 பேர் உயிருக்கு ஆபத்​தான நிலை​யில் உள்​ள​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர்.

மத்​திய ஜாவா காவல்​ துறை தலை​வர் ரிபுத் ஹரி விபோவோ கூறும்​போது, "விபத்​துக்கு முன் அந்​தப் பேருந்து மிக வேகத்​தில் சென்​ற​தாக நேரில் பார்த்த ஒரு​வர் கூறி​னார். விபத்​தில் காயம் அடைந்த ஓட்​டுநர் சிகிச்​சை​யில் உள்​ளார். அவரிடம் விசா​ரணை நடத்த உள்ளோம்” என்​றார்​.

SCROLL FOR NEXT