உலகம்

கோதுமை, பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாகிஸ்தான் முழுவதும் போராட்டம்

செய்திப்பிரிவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்​தான் முழு​வதும் கோது​மைக்கு கடும் தட்டுப்​பாடு ஏற்​பட்டு இருக்​கிறது.

கடந்த மார்ச் மாதம் பாகிஸ்​தானில் 20 கிலோ கோதுமை மாவு பாக்​கெட் ரூ.1,800-க்கு (இந்​திய ரூபா​யில் 616.71) விற்​பனை செய்​யப்​பட்​டது. தற்​போது இதே அளவு கோதுமை மாவு ரூ.3,200-க்கு (இந்​திய ரூபா​யில் 1,096.38) விற்​பனை செய்​யப்​படு​கிறது.

சமையல் எண்​ணெய், மளிகை பொருட்​களும் கணிச​மாக விலை உயர்ந்​துள்​ளன. ஒரு வாரத்​தில் மட்​டும் உணவு பொருட்​களின் விலை 10% வரை உயர்ந்​திருக்​கிறது.

இதே​போல பாகிஸ்​தானில் பெட்​ரோல், டீசல் விலை​யும் கணிச​மாக உயர்ந்து உள்​ளது. அங்கு ஒரு லிட்​டர் பெட்​ரோல் ரூ.459-க்​கும் (இந்​திய ரூபா​யில் 157.26), ஒரு லிட்​டர் டீசல் ரூ.520-க்​கும் (இந்​திய ரூபா​யில் 178.16) விற்​பனை செய்​யப்​படு​கிறது.

இந்த சூழலில் கோதுமை மாவு, பெட்​ரோல், டீசல் விலை உயர்​வைக் கண்​டித்து ஜமாத் இ இஸ்​லாமி கட்சி சார்​பில் பாகிஸ்​தான் முழு​வதும் தொடர் போராட்​டங்​கள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன. இதனிடையே, உள்​நாட்​டுப் போர், விலை​வாசி உயர்வு காரண​மாக பாகிஸ்​தான் பல்​வேறு பகு​தி​களாக உடை​யும் அபா​யம் இருக்​கிறது என்​று சர்​வ​தேச ​பாது​காப்​பு நிபுணர்​கள்​ தெரிவித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT