உலகம்

ஈரான் அச்சுறுத்தல் காரணமாக உணவு லாரியில் ரகசியமாக பயணம் செய்த அதிபர் ட்ரம்ப்

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: ஈரான் அச்​சுறுத்​தல் காரண​மாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உணவு ஏற்​றிச் செல்​லும் லாரி​யில் ரகசி​ய​மாக பயணம் செய்​திருப்​பது தெரிய​வந்​துள்​ளது.

கடந்த ஜூலை 7, 8 தேதி​களில் துருக்கி தலைநகர் அங்​கா​ரா​வில் நேட்டோ உச்சி மாநாடு நடை​பெற்​றது. துருக்​கி​யில் இருந்து பிரிட்ட​னுக்கு சென்​ற​போது கத்​தார் வழங்​கிய சொகுசு விமானத்தை அதிபர் ட்ரம்ப் பயன்​படுத்​த​வில்​லை.

இதுகுறித்து அமெரிக்​கா​வின் நியூ​யார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஈரான் அச்​சுறுத்​தல் காரணமாக கத்​தார் அரச குடும்​பம் வழங்​கிய சொகுசு ஜெட் விமானத்தை அதிபர் ட்ரம்ப் புறக்​கணித்​துள்​ளார். இதே​போல பழைய ஏர்​போர்ஸ் ஒன் விமானத்​தை​யும் அவர் பயன்​படுத்தவில்லை.

துருக்கி தலைநகர் அங்​கா​ரா​வில் ஏர் போர்ஸ் ஒன் விமானத்​தில் அவர் ஏறும்​போது செய்​தி​யாளர்​கள் புடைசூழ்ந்து வீடியோ, புகைப்​படம் எடுத்​தனர். அவர்​களுக்கு கையசைத்​த​வாறு அதிபர் ட்ரம்ப் விமானத்​துக்​குள் ஏறி​னார். அதே விமானத்​தில் செய்​தி​யாளர்​களும் ஏறி தங்​களுக்​கான இருக்​கை​களில் அமர்ந்​தனர். அவர்​கள் இருந்த பகு​தி​யின் கதவு, ஜன்​னல்​கள் மூடப்​பட்​டன

போர்க்​காலங்​களில் இது​போன்ற முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் எடுக்​கப்​படு​வது வழக்​கம். ஈரான் அச்​சுறுத்​தல் காரண​மாக கதவு​கள் மூடப்​படு​வ​தாக செய்​தி​யாளர்​கள் கரு​தினர். ஆனால் சிறிதுநேரத்​தில் ஏர்போர்ஸ் ஒன் விமானத்​தில் இருந்து அதிபர் ட்ரம்ப் கீழே இறங்​கி் உணவு லாரி​யில் ரகசி​ய​மாக பயணம் செய்து சற்று தொலை​வில் நிறுத்​தப்​பட்​டிருந்த சி-32ஏ ராணுவ விமானத்​துக்கு மாறி​னார்.

ஈரான் ராணுவத்​தால் அதிபர் ட்ரம்​பின் உயிருக்கு அச்​சுறுத்​தல் இருப்​ப​தாக அமெரிக்க உளவுத் துறை எச்​சரிக்கை விடுத்​தது. இதன் காரண​மாக யாருக்​கும் தெரி​யாமல் மாற்று விமானத்​தில் அவர் பயணம் செய்​திருக்​கிறார். இது செய்​தி​யாளர்​களுக்​கும் தெரி​யாது. ஏர் போர்ஸ் ஒன் விமானத்​தில் பயணம் செய்த அதிபர் மாளிகை அதி​காரி​களுக்​கும்​கூட தெரி​யாது. மூத்த அதி​காரி​கள் சிலருக்கு மட்​டுமே உண்மை தெரி​யும்​. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT