உலகம்

“இந்தியாவை உலகத்துடன் இணைப்பது தமிழ்” - மலேசியாவில் பிரதமர் மோடி புகழாரம்

செய்திப்பிரிவு

கோலாலம்பூர்: மலேசி​யா​வில் வசிக்​கும் தமிழர்​களை சந்​தித்த பிரதமர் மோடி, இந்​தி​யாவை உலகத்​துடன் இணைப்​பது தமிழ் என பெரு​மை​யுடன் கூறி​னார்.

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக மலேசி​யா​வுக்கு நேற்று சென்​றார். அவரை கோலாலம்​பூர் விமான நிலை​யத்​தில் மலேசிய பிரதமர் அன்​வர் இப்​ராகிம் நேரில் வரவேற்று தனது காரில் அழைத்​துச் சென்​றார். இவர்​கள் இரு​வரும் பல துறை​களில் இருதரப்பு உறவை மேம்​படுத்​து​வது குறித்து பேச்​சு​வார்த்தை நடத்​தினர். மலேசி​யா​வில் உள்ள இந்​தி​யர்​களை​யும் பிரதமர் மோடி சந்​தித்து பேசி​னார். இவர்​களில் பெரும்​பாலானோர் தமிழர்​கள். அவர்​களிடம் பிரதமர் மோடி பேசி​ய​தாவது:

          

இந்​தி​யர்​கள் அதி​கம் வசிக்​கும் 2-வது பெரிய நாடு மலேசி​யா. இரு நாடு​கள் இடையே​யான உறவை வலுப்​படு​வ​தில் இங்​குள்ள இந்​தி​யர்​கள் முக்​கிய பங்​காற்​றுகின்​றனர். இங்கு தமிழ் பேசும் மக்​கள் அதி​கம் உள்​ளனர். அதனால் தமிழை மலேசிய அரசு சிறு​பான்மை மொழி​யாக அங்​கீகரித்​துள்​ளது. இந்​தி​யாவை உலகத்​துடன் இணைப்​பது தமிழ். தமிழ் இலக்​கி​யம் நிலை​யானது. தமிழ் கலாச்​சா​ரம் உலகளா​வியது. அன்​வர் இப்​ராஹிம் பிரதம​ராகு​வதற்கு முன்பே நாங்​கள் நண்​பர்​கள். அதனால் அவர் விமான நிலை​யம் வந்​து, என்னை அவரது காரில் அழைத்து வந்​தார். இது அவருக்கு இந்​தியா மற்​றும் இந்​தி​யர்​கள் மீதான அன்பு மரி​யாதையை காட்​டு​கிறது. இவர் பாடி இந்​திப் பாடல்​கள் வைரலானது. எம்​ஜிஆர் பாடல்​களை​யும் அவர் விரும்​பிப்​பாடு​வது அரு​மை.

முன்பு இந்​தியா மிகப் பெரிய சந்​தை​யாக பார்க்​கப்​பட்​டது. தற்​போது, இந்​தியா முதலீடு மற்​றும் வர்த்தக மைய​மாக மாறி​யுள்​ளது. வளர்ச்​சிக்​கான நம்​பத்​தகுந்த நாடாக இந்​தியா தற்​போது பார்க்​கப்​படு​கிறது. விரை​வில் சிவ​ராத்​திரி, ரம்​ஜான் பண்​டிகைகள் வரவுள்​ளன. அனை​வருக்​கும் வாழ்த்​து​கள். இவ்​வாறு பிரதமர்​ மோடி பேசி​னார்​.

SCROLL FOR NEXT