உலகம்

பிரதமர் மோடி நெஞ்​சுரம் கொண்டவர்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம்

செய்திப்பிரிவு

வாஷிங்​டன்: பிரதமர் மோடி மிகுந்த நெஞ்​சுரம் கொண்​ட​வர் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.

ஈரானுடன் அமைதி ஒப்​பந்​தம் குறித்து அமெரிக்​கஊடகத்​துக்கு அவர் அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: எவ்​வித நிபந்​தனை​யும் இன்றி ஈரான் சரண் அடைந்​திருக்​கிறது. அடுத்த 60 நாட்​கள் ஈரான் தரப்​புடன் விரி​வான பேச்​சு​வார்த்தை நடத்​தப்​படும். இதன் அடிப்​படை​யில் இறுதி அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும். ஈரானிடம் அணு ஆயுதங்​கள் இருக்​கக்​கூ​டாது என்​ப​தில் நாங்​கள் உறு​தி​யாக இருக்​கிறோம்.

ஈரான் போரால் கச்சா எண்​ணெய் விநி​யோகம் பாதிக்​கப்​பட்​டது. போர் முடிவுக்கு வந்​துள்ள நிலை​யில் உலகின் எரிசக்தி பாது​காப்பை உறுதி செய்ய தேவை​யான நடவடிக்​கைகளை அமெரிக்கா மேற்​கொள்​ளும். குறிப்​பாக ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் தடையற்ற சரக்கு கப்​பல் போக்​கு​வரத்து உறுதி செய்​யப்​படும்.

அமெரிக்​கா, இந்​தியா இடையே நெருங்​கிய நட்​புறவு நீடிக்​கிறது. இரு நாடு​கள் இடையி​லான வர்த்தக ஒப்​பந்​தம் இறு​திக் கட்​டத்தை எட்டி உள்​ளது. வர்த்​தகம் தொடர்​பாக பிரதமர் மோடியோடு பேச்​சு​வார்த்தை நடத்​து​வது மிக​வும் கடினம்.

அண்​மை​யில் ஜி7 மாநாட்​டில் பங்​கேற்​றேன். அப்​போது பல்​வேறு நாடு​களின் தலை​வர்​களை சந்​தித்​துப் பேசினேன். இதில் பிரதமர் மோடியை வியந்து பார்க்​கிறேன். அவர் மிகுந்த நெஞ்​சுரம் கொண்​ட​வர். பிரதமர் மோடி தனது நாட்டின் நலனுக்காக தனது முழு சக்தியையும் பயன்படுத்துகிறார். அதே​நேரம் அவர் மிக​வும் அழகானவர், பண்​பானவர், மென்​மை​யானவர். அவர் ஒரு தேவ தூதரை போன்​றவர். எனக்கு மிக​வும் நெருங்​கிய நண்​பர். நான் வியந்து பார்க்​கும் தலை​வர்​களில் சீன அதிபர் ஜி ஜின்​பிங்​கும் ஒரு​வர். அவரது ஒவ்​வொரு வார்த்​தை​யும் வணி​கம் சார்ந்​த​தாகவே இருக்​கும். இவ்​வாறு ட்ரம்​ப் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT