உலகம்

ஐரோப்​பிய மனித உரிமை​கள் நீதி​மன்​றத்​தி​லும் மனு தள்ளுபடி: நீரவ் மோடியை இந்தியா​ அழைத்து வர தீவிரம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பஞ்​சாப் நேஷனல் வங்கி (பிஎன்​பி) மோசடி வழக்​கில் தேடப்​பட்டு வரும் பிரபல வைர வியா​பாரி நீரவ் மோடியை இந்தியா​வுக்கு நாடு கடத்​து​வதற்​கான இறு​திக்​கட்ட பணி​கள் தீவிரமடைந்​துள்​ளன.

ரூ.14,000 கோடிக்​கும் அதி​க​மான பிஎன்பி வங்கி மோசடி மற்​றும் சட்​ட​விரோத பணப் பரி​மாற்ற வழக்​கு​களில் நீரவ் மோடி முதன்மை குற்​ற​வாளி​யாகச் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். இதுகுறித்து சிபிஐ மற்​றும் அமலாக்​கத்​துறை ஆகியவை தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றன. கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் கைது செய்​யப்​பட்ட நீரவ் மோடி, அங்​குள்ள வாண்ட்​ஸ்​வொர்த் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார்.

அவரை இந்​தி​யா​வுக்கு நாடு கடத்த பிரிட்​டன் உள்​துறை அமைச்சகம் ஒப்​புதல் அளித்​ததை எதிர்த்​து, அவர் அங்​குள்ள பல்​வேறு நீதி​மன்​றங்​களில் தொடர்ந்த வழக்​கு​கள் தள்​ளு​படி செய்யப்பட்டன. பிரிட்​டனில் அனைத்து சட்ட வழிகளும் அடைக்கப்​பட்​டதைத் தொடர்ந்​து, இறு​தி​யாக கடந்த ஏப்​ரல் மாதத்தில் நீரவ் மோடி பிரான்ஸ் நாட்​டின் ஸ்ட்​ராஸ்​பர்க் நகரில் உள்ள ஐரோப்​பிய மனித உரிமை​கள் நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீட்டு மனுவை தாக்​கல் செய்​தார்.

விசாரணையின்போது, இந்​தி​யா​வுக்கு அனுப்​பப்​பட்​டால் தான் சித்திர​வதைக்கு உள்​ளாக்​கப்​படலாம் என்​றும், இந்​திய சிறைச்​சாலைகளின் தரம் மோச​மாக இருப்​ப​தாக​வும் நீரவ் மோடி தரப்பில் வாதிடப்பட்டது. எனினும், அவருக்கு உரிய பாது​காப்பு வழங்​கப்​படும் என்​று இந்​திய அரசு தரப்​பில் உத்தரவாதம் அளிக்கப்​பட்து. இதையடுத்து, நீரவ் மோடியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே, எந்த நேரத்​தி​லும் நீரவ் மோடி இந்தியாவுக்​குக் அழைத்து வரப்​படலாம் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT