உலகம்

இந்தியா உடனான வர்த்தகத் தடையால் பாகிஸ்தானுக்கு ரூ.3.3 லட்சம் கோடி இழப்பு

செய்திப்பிரிவு

லாகூர்: இந்தியாவுடனான வர்த்தகம் 2019-ல் நிறுத்​தப்​பட்​ட​தால், பாகிஸ்தானுக்கு சுமார் ரூ.3.3 லட்​சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான்-இந்தியா வர்த்​தக கவுன்​சில் தலைவர் நூர் முகமது கசூரி கூறியுள்​ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு காஷ்மீரின் புல்​வாமா பகுதி​யில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிர​வாதி​கள் நடத்​திய தாக்​குதலில், 40-க்​கும் மேற்​பட்ட சிஆர்​பிஎஃப் வீரர்​கள் உயி​ரிழந்​தனர். இதையடுத்து, பாகிஸ்தானுடனான வர்த்​தகத்தை இந்​தியா நிறுத்தி​யது. இது​குறித்து பாகிஸ்​தான்-இந்​தியா வர்த்​தக கவுன்சில் தலை​வர் நூர் முகமது கசூரி கூறிய​தாவது: இந்​தியாவுடனான வர்த்​தகம் நின்​றதால், பாகிஸ்தானுக்கு சுமார் ரூ.3.3 லட்​சம் கோடி இழப்பு ஏற்​பட்​டுள்​ளது.

குறிப்​பாக, சர்க்​கரை, உரம், சிமென்ட், பெட்​ரோலியப் பொருட்​கள், இரும்பு, காய்​கறிகள் உள்ளிட்ட தேவை​யான பொருட்​களைத் தொலை​தூர நாடுகளி​லிருந்து இறக்​குமதி செய்ய வேண்​டிய நிலைக்​குப் பாகிஸ்​தான் வணிகர்​கள் தள்​ளப்​பட்​டனர். இத​னால் போக்​கு​வரத்து, சரக்​குக் கட்​ட​ணங்​கள் உயர்ந்​துள்​ளன. மருந்துப் பொருட்களை இந்​தி​யாவி​லிருந்து நேரடி​யாக வாங்​கினால், இத்​துறை ஆண்​டுக்கு 2 முதல் 3 பில்​லியன் டாலர் வரை சேமிக்​கலாம்.

வரலாறு, கலாச்​சா​ரம், குடும்ப உறவு​களைப் பகிர்ந்​து​கொள்​ளும் இரு நாடுகளும் வர்த்​தகத்தை மீண்​டும் தொடங்​கினால், இரு நாட்டு வணிகங்​களுக்​கும் நன்மை கிடைக்​கும். இவ்​வாறு அவர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT