முரித் விமானப்​படைத் தளம்

 
உலகம்

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் சேதமடைந்த பாகிஸ்தான் விமானப்படைத் தளம் இடிப்பு

மறுசீரமைக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் நடவடிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த ஆண்டு இந்​திய விமானப்​படை நடத்​திய ‘ஆபரேஷன் சிந்​துார்’ தாக்​குதலில் பாகிஸ்​தானின் முக்​கிய முரித் விமானப்​படைத் தளம் பலத்த சேதமடைந்தது. அதை மறுசீரமைக்கும் முயற்சி தோல்​வியடைந்த நிலை​யில், முழுமையாக இடித்​துத் தரைமட்​ட​ம் ஆக்​கப்பட்​டுள்​ள​து செயற்கைக் ​கோள் புகைப்​படம் மூலம் அம்​பல​மாகி​யுள்​ளது.

பாகிஸ்​தானின் சக்​வால் பகு​திக்கு அருகே அமைந்​துள்​ளது முரித் விமானப்​படைத் தளம். இது, அந்​நாட்​டின் மிக முக்​கிய​மான கட்டளை மற்​றும் கட்​டுப்​பாட்டு மைய​மாக விளங்​கியது.

          

கடந்த 2025, மே 10-ல் அதிகாலை 2 மணி முதல் 5 மணிக்குள் இந்​திய விமானப்​படை நடத்​திய துல்​லி​ய தாக்​குதலில் பாகிஸ்​தானின் 10 விமானப்​படைத் தளங்​கள் நிலைகுலைந்​தன. அதில் முரித் தளமும் ஒன்​று. தாக்​குதலுக்​குப் பிறகு அத்​தளம் தார்​பாய்​களால் மூடப்​பட்​டு, ரகசி​ய​மாகப் பழுது​பார்க்​கப்​பட்டு வந்​தது.

இது குறித்த சமீபத்​திய செயற்​கைக்​கோள் படங்​களை ஆய்வு செய்த பாது​காப்​புத் துறை நிபுணர் டேமியன் சைமன் பாகிஸ்தானின் பழுது​பார்க்​கும் பணி தோல்​வியடைந்​ததை உறுதிப்படுத்​தி​யுள்​ளார்.

கடந்த பிப்​ர​வரி 28ம் தேதி எடுக்​கப்​பட்ட படங்​களில், முரித் விமானப் படைத்​ தளத்​தில் சிதைந்த கட்​டு​மானக் கழி​வு​களும், சிவந்த மண் தரை மட்​டுமே எஞ்​சி​யிருப்​பது தெரி​கிறது.

அதாவது, இந்​தி​யத் தாக்​குதலின் தாக்​கம் கட்​டிடத்​தின் மேற்கூரையைத் தாண்​டி, அதன் அடித்​தளம் வரை கடுமை​யாகப் பாதிப்பை ஏற்​படுத்​தி​யுள்​ள​தால் அதைச் சீரமைக்க முடி​யாமல் பாகிஸ்​தான் ராணுவம் முழு​மை​யாக இடித்​துள்​ளது.

இந்​திய விமானப் ​படை​யின் வலிமை​யான தாக்​குதலின் பாதிப்​பில் இருந்து பாகிஸ்​தா​னால் மீள முடிய​வில்லை என்​பதை இந்​தச் செயற்​கைக்​கோள் ஆதா​ரங்​கள்​ உறு​திப்​படுத்​து​வ​தாக அமைந்துள்​ளன.

SCROLL FOR NEXT