உலகம்

யுஏஇ ஓட்டலில் இந்தியர், அமெரிக்கருக்கு மட்டுமே அறை: பாக். முன்னாள் சபாநாயகர் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

இஸ்லாமாபாத்: ஐக்​கிய அரபு அமீரக ஓட்​டலில் இந்​தி​யர், அமெரிக்​கருக்கு மட்​டுமே அறை தரப்​பட்​ட​தாக​வும், பாகிஸ்​தானியர்​கள் பாகு​பாடுடன் நடத்​தப்​பட்​ட​தாக​வும் பாகிஸ்​தான் முன்​னாள் சபா​நாயகரும், பிடிஐ தலை​வ​ரு​மான அசாத் கைசர் எம்​.பி. நாடாளு​மன்​றத்​தில் குற்றம்​சாட்டி​யுள்​ளார்.

ஐக்​கிய அரபு அமீரகத்​தில் (யுஏஇ) விமானம் ரத்து செய்​யப்​பட்​ட​போது, இந்​திய,அமெரிக்க பாஸ்​போர்ட் வைத்​திருந்​தவர்​களுக்கு மட்​டுமே அறை வசதி வழங்​கப்​படும் என அறிவிக்​கப்​பட்​ட​தாக​வும், பாகிஸ்​தான் பயணி​களிடம் தரக்​குறை​வாக நடந்​து கொண்​ட​தாக​வும் அசாத் கைசர் தனக்கு ஏற்​பட்ட கசப்​பான அனுபவத்​தைக் கூறி​யுள்​ளார்.

இந்​நிகழ்வு குறித்து உடனடி​யாகத் தூதரக மட்​டத்​தில் அமீரக அரசுடன் பேசி விளக்​கம் பெற வேண்​டும் என பாகிஸ்​தான் வெளி​யுறவுத்​துறை அமைச்​சகத்​திடம் அவர் வலி​யுறுத்​தி​னார். அமீரகத்​தின் வளர்ச்​சி​யில் பாகிஸ்​தானியர்​களின் பங்​களிப்​பை​யும், இரு நாடு​களுக்கு இடையே​யான நீண்​ட​கால நல்​லுறவை​யும் அவர் சுட்​டிக்​காட்​டி​னார்.

அமெரிக்கா - ஈரான் மோதலின்​போது பாகிஸ்​தான் ஆக்​கப்​பூர்​வ​மான பங்​காற்​றி​யிருந்த நிலை​யில், சகோதர இஸ்​லாமிய நாடான அமீரகத்​தில் இத்​தகைய நிகழ்வு நடந்​திருப்​பது ஏமாற்​றம் அளிப்​ப​தாக​வும், எனினும் இதனால் இருதரப்பு உறவு​கள் பாதிக்​கப்​படக் கூடாது என்​றும் அவர் தெரி​வித்​தார். இதே​போன்ற அனுபவங்​களை பிற குழு​வினரும் தம்​மிடம் தெரி​வித்​த​தாக அவர் குறிப்​பிட்​டாலும், இது ஆதா​ரங்​கள் மூலம் இது​வரை உறு​திப்​படுத்​தப்​பட​வில்​லை.

அமீரகத்​தில் சுமார் 15 லட்​சம் பாகிஸ்​தானியர்​கள் வசித்து வரு​ம் நிலை​யில் இச்​சம்​பவத்தை பாகிஸ்​தான் அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்​டும் என வலி​யுறுத்​தப்​படுகிறது.

SCROLL FOR NEXT