உலகம்

காசாவாக மாறிவிட்டது ஆக்கிரமிப்பு காஷ்மீர்: பாகிஸ்தான் ராணுவம் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

முசாபராபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 53 தொகுதிகளில் 12 தொகுதி​கள், இந்திய காஷ்மீரில் இருந்து குடியேறிய​வர்​களுக்கு ஒதுக்​கப்​படு​கிறது. இதற்கு ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்​கள் எதிர்ப்பு தெரி​விக்கின்​றனர். அங்கு கோதுமைமாவு உள்​ளிட்ட அத்​தி​யாவ​சிய பொருட்​களின் விலையும், மின் கட்​ட​ணமும் கணிச​மாக உயர்ந்துள்​ளது.

இந்த பிரச்​சினைகளை முன்​னிறுத்தி ஆக்​கிரமிப்பு காஷ்​மீர் பகுதி மக்​கள் கடந்த ஜூன் முதல் போராட்​டங்​களில் ஈடு​பட்டு வருகின்றனர். கடந்த வியாழக்​கிழமை ஆக்​கிரமிப்பு காஷ்மீரின் ராவலாகோட் நகரில் பொது​மக்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அவர்​கள் மீது ராணுவ வீரர்​கள் துப்​பாக்​கிச்​சூடு நடத்​தினர்.

இதில் 4 குழந்​தைகள் உட்​பட 18 பேர் உயி​ரிழந்​தனர். 35-க்​கும் மேற்​பட்​டோர் படுகாயம் அடைந்​தனர். கடந்த ஜூன் முதல் இது​வரை 153 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். இது​தொடர்​பாக ஆக்​கிரமிப்பு காஷ்மீர் மக்​கள் மற்​றும் ஒருங்​கிணைந்த அவாமி செயல் குழுவின் மூத்த தலை​வர்​கள் கூறிய​தாவது:

இஸ்​ரேல் ராணுவத்தின் தாக்​குதலில் பாலஸ்தீனத்​தின் காஸா பகுதி நரகமாக மாறி​யிருக்​கிறது. தற்​போது பாகிஸ்​தான் ராணுவம், இஸ்ரேல் ராணுவ பாணி​யில் கொடூர தாக்​குதல்​களில் ஈடு​பட்டு வரு​கிறது. இதன்​காரண​மாக ஆக்​கிரமிப்பு காஷ்​மீர் பகுதி காசாவாக மாறியுள்​ளது. இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT