உலகம்

அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் பேச்சுவார்த்தை நடக்காது: ட்ரம்ப்புக்கு ஈரான் எச்சரிக்கை

மோகன் கணபதி

டெஹ்ரான்: தங்களுக்கு எதிரான அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடருமானால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று ஈரான் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி​யையும் அவரது பாரம்பரியத்தையும் கவுரவிக்கும் நோக்கில் அவரது இறுதிப் பேரணியில் லட்சக்கணக்கான ஈரானியர்கள் பெருமையுடனும் ஒற்றுமையுடனும் ஒன்றுகூடினர். அவர்களோ ஈரானின் வீரமிக்க ஆயுதப்படைகளோ எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அஞ்சவில்லை.

அமெரிக்கா ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். ஈரான் - அமெரிக்கா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 13-வது பிரிவு ஒன்றை தெளிவுபடுத்தியுள்ளது. அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் இறுதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படாது என்பதே அது. எனவே, அமெரிக்கா ஒப்பந்தத்தை மதித்து செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஈ​ரானின் மறைந்த உச்ச தலை​வர் அயதுல்லா அலி கமேனி​யின் இறு​திச்​சடங்​கில் கூடி​யிருந்த ஈரானிய தலைவர்களை ஒரே குண்​டில் அமெரிக்​கா​வால் கொல்ல முடி​யும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறி இருந்தார்.

இந்த இறு​திச் ​சடங்கு ஊர்​வலங்​கள் குறித்து கடந்த 5-ம் தேதி அவர் அளித்த பேட்​டியில், “கமேனியை மக்​கள் வெறுப்​ப​தாகவே நான் நினைத்​தேன், அங்கு மக்​கள் சிந்துவது போலி கண்​ணீ​ராக இருக்​கலாம். அங்கு ஈரானின் ஒட்​டுமொத்த முக்​கிய தலை​மை​களும் கூடியுள்ளனர். நான் நினைத்​தால் ஒரே குண்டில் அவர்​கள் அனை​வரை​யும் வீழ்த்தி​விட முடி​யும். ஆனால், நாம் அதைச் செய்​யப் போவதில்லை; ஏனெனில், அதன் பிறகு பேச்​சு​வார்த்தை நடத்துவதற்கு அங்கே எவரும் இருக்க மாட்​டார்​கள்” என்று ஏளன​மாகக் கூறி இருந்தார்.

கடந்த பிப்​ர​வரி 28 அன்று அமெரிக்​க - இஸ்​ரேல் கூட்டு வான்​வழித் தாக்​குதலில் ஈரானின் உச்ச தலை​வர் அயதுல்லா அலி கமேனி கொல்​லப்​பட்​டார். அவரது மறைவைத் தொடர்ந்து ஈரான் தலைநகர் டெஹ்​ரானில் அரசு சார்​பில் மிக பிரம்​மாண்​ட​மான இறு​திச்​சடங்கு நிகழ்வு​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதில் ஈரானின் தற்போதைய முக்​கிய தலை​வர்​கள் மற்​றும் வெளிநாட்டுப் பிர​தி​நி​தி​கள் பலரும் கலந்து கொண்​டுள்​ளனர். டெஹ்ரானில் ஜூலை 4-ம் தேதி தொடங்கிய இறுதிச் சடங்குகள், அயதுல்லா அலி கமேனியின் சொந்த ஊரான மஷாத்தில் ஜூலை 9-ம் தேதி உடல் நல்லடக்கம் செய்யப்படுவதுடன் நிறைவடைகிறது.

SCROLL FOR NEXT