நித்யா ராமன்

 
உலகம்

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் போட்டியிடும் நித்யா ராமன்

செய்திப்பிரிவு

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்​கா​வின் லாஸ் ஏஞ்​சல்ஸ் மேயர் தேர்​தல் ஜூன் 2-ம் தேதி நடை​பெறுகிறது. இதில் போட்​டி​யிடும் நித்யா ராமன், தற்​போதைய மேயர் கரேன் பாஸுக்கு கடும் சவாலாக உரு​வெடுத்​துள்​ளார். இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன். வெற்றி பெறு​வதற்​கான வாய்ப்பு 60 சதவீதம் இருப்பதாகக் கணிக்​கப்​பட்​டுள்​ளது.

கேரளாவைச் சேர்ந்த தமிழ் குடும்​பத்​தில் 1981-ல் பிறந்​தவர்​தான் நித்யா ராமன். இவருக்கு 6 வயது இருக்​கும்போது, பெற்​றோர் அமெரிக்கா​வுக்கு குடிபெயர்ந்​தனர். ஹார்​வர்ட் பல்​கலைக்​கழகத்தில் அரசி​யல் கோட்​பாடும், மசாசூசட்ஸ் தொழில்​நுட்​பக் கல்வி நிறு​வனத்​தில் நகரத் திட்​ட​மிடலும் பயின்​றார். இவர் ஒரு காலத்தில் சென்​னைக்​குத் திரும்​பி, துப்​புரவு மற்​றும் சுகா​தார மேம்பாட்டுக்​காக ஒரு ஆராய்ச்சி நிறு​வனத்​தைத் தொடங்​கி​னார்.

கடந்த 2013-ல் லாஸ் ஏஞ்​சல்ஸ் நகரில் குடியேறிய இவர், வீடு இல்​லாதவர்​களுக்​காக செலா (SELAH) என்ற அமைப்​பைத் தொடங்​கி​னார். மேலும், ‘மீ டூ’ இயக்​கத்​துடன் தொடர்​புடைய ‘டைம்ஸ் அப் என்​டர்​டெய்ன்​மென்ட்’ அமைப்​பிலும் பணி​யாற்​றி​னார்.

கடந்த 2020-ல் ஹிலாரி கிளிண்​டன் போன்ற ஜாம்​ப​வான்​களின் ஆதரவு பெற்ற ஒரு​வரைத் தோற்​கடித்​து, லாஸ் ஏஞ்​சல்ஸ் நகர சபை உறுப்​பின​ராக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட முதல் தெற்​காசி​யப் பெண் என்ற சாதனையைப் படைத்​தார் நித்யா ராமன். இந்​நிலை​யில், அடுத்த மாதம் நடை​பெற உள்ள தேர்​தலில் மேயர் பதவிக்கு போட்​டி​யிடு​வதற்​காக கடைசி நேரத்​தில் (பிப்​.7-ம் தேதி) மனுத் தாக்​கல் செய்தார்.

அடுத்த ‘மம்​தானி’: இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த ஜோரான் மம்​தானி கடந்த ஆண்டு நடந்த நியூ​யார்க் மேயர் தேர்​தலில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்​தார். இந்​நிலை​யில், மம்​தானியைப் போல நித்யா ராமனும் லாஸ் ஏஞ்​சல்ஸ் அரசி​யலில் ஒரு பெரிய மாற்​றத்தை ஏற்​படுத்​து​வார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

லாஸ் ஏஞ்​சல்ஸ் நகர மேயர் தேர்​தலில் மீண்​டும் போட்​டி​யிடும் மேயர் பாஸை ஆதரிப்​ப​தாக முதலில் கூறிய நித்யா ராமன், இப்​போது அவருக்கு எதி​ராகப் போட்​டி​யிடு​வ​தால், 'அரசி​யல் துரோகி' என்று சில அமைப்​பு​கள் இவரை விமர்​சிக்​கின்​றன. ஆனால், 'இது நட்பு சார்ந்​தது அல்ல, நகரின் எதிர்​காலம் மற்​றும் பிரச்​சினை​களைத் தீர்ப்​பது சார்ந்​தது' என்​று நித்​யா பதிலடி கொடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT