கோப்புப் படம்

 
உலகம்

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எண்ணெய் கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு

செய்திப்பிரிவு

டெஹ்ரான்: ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தியை கடக்​கும் இந்திய எண்ணெய் கப்​பல்​களுக்கு இந்​திய கடற்​படை​யின் போர்க்​கப்​பல்​கள் பாது​காப்பு வழங்கி வரு​கின்​றன.

அரபிக்கடலில் பெர்​சி​யன் வளை​கு​டாவை​யும், ஓமன் வளை​கு​டாவை​யும் ஹார்​முஸ் ஜலசந்தி இணைக்​கிறது. இந்த ஜலசந்தி ஈரான் கடல் எல்​லையை ஒட்டி அமைந்துள்ளது. ஆசிய நாடு​களுக்​கான 85 சதவீத கச்சா எண்​ணெய், சமையல் காஸ் ஏற்​றுமதி ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாகவே நடை​பெறுகிறது.

          

அமெரிக்கா உடனான போர் காரண​மாக இந்த ஜலசந்​தி​யில் சரக்கு கப்​பல் போக்​கு​வரத்தை ஈரான் ராணுவம் முடக்கியுள்​ளது. இதன்​காரண​மாக, இந்​தி​யா​வில் சமையல் காஸ் சிலிண்​டர்​களுக்கு கடும் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டது. இதற்கு தீர்வு காணபிரதமர் நரேந்​திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் சமீபத்தில் தொலைபேசி வாயிலாக பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.

இதன் பலனாக, ‘ஷிவாலிக்’, ‘நந்​தாதேவி’ ஆகிய இந்​திய கப்​பல்​கள் சுமார் ஒரு லட்​சம் டன் சமையல் காஸுடன் நேற்று முன்​தினம் ஹார்​முஸ் ஜலசந்​தியை பாது​காப்​பாக கடந்​தன. இரு கப்பல்​களும் இன்று அல்​லது நாளை குஜ​ராத்தை வந்தடையும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

பெர்​சியன் வளை​குடா பகு​தி​யில் சுமார் 22 இந்திய எண்ணெய் கப்​பல்​கள் ஆங்காங்கே நிறுத்​தப்​பட்டுள்ளன. அந்த கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை பாது​காப்​பாக கடக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது.

இதுதொடர்​பாக இந்​திய கடற்​படை வட்​டாரம் கூறிய​தாவது: ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தியை கடக்​கும் இந்​திய எண்ணெய் கப்​பல்​களுக்கு இந்​திய கடற்​படை​யின் போர்க்​கப்​பல்​கள் பாது​காப்பு வழங்கி வரு​கின்​றன.கடந்த 14-ம் தேதி ஹார்​முஸ் ஜலசந்​தியை 2 இந்​திய கப்​பல்​கள் கடந்து சென்​றன.

அந்த கப்​பல்​களுக்கு இந்​திய போர்க்​கப்​பல்​கள் பாது​காப்பு வழங்​கின. பெர்​சியன் வளை​குடா பகு​தி​யில் 3 இந்​திய போர்க் ​கப்​பல்​கள் தயார் நிலை​யில் நிறுத்​தப்​பட்டு உள்​ளன. தேவைக்கு ஏற்ப இவை பயன்​படுத்​தப்​படும். இவ்​வாறு அந்த வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.

SCROLL FOR NEXT