பிரான்ஸின் எவியான் நகரில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்றார். அப்போது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்தித்துப் பேசினார்.

 
உலகம்

பிரான்ஸில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் அதிபர் ட்ரம்ப் - பிரதமர் மோடி சந்திப்பு

இன்று உலகத் தலைவர்களுடன் தனித்தனியாக பேச்சு

செய்திப்பிரிவு

எவியான்: பி​ரான்​ஸின் எவி​யான் நகரில் நடை​பெறும் ஜி7 உச்சி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று சிறப்பு விருந்​தின​ராகக் கலந்து கொண்​டார். அப்​போது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்​ளிட்ட உலகத் தலை​வர்​களை அவர் சந்​தித்​துப் பேசி​னார்.

ஜி7 அமைப்​பில் அமெரிக்​கா, பிரிட்​டன், பிரான்​ஸ், ஜெர்​மனி, இத்​தாலி, கனடா, ஜப்​பான் ஆகிய நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்​ளன. இந்த ஆண்​டுக்​கான ஜி7 உச்சி மாநாடு பிரான்​ஸின் எவி​யான் நகரில் கடந்த 15-ம் தேதி தொடங்​கியது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரிட்​டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்​மர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்​ரான், ஜெர்​மனி பிரதமர் பிரெட்​ரிக் மெர்​ஸ், இத்​தாலி பிரதமர் ஜார்​ஜியா மெலோனி, கனடா பிரதமர் மார்க் கார்​னி, ஜப்​பான் பிரதமர் சனே டகைச்சி மற்​றும் ஐரோப்​பிய ஆணை​யத்​தின் தலை​வர் உர்​சுலா வொன் டெர் லியன், ஐரோப்​பியக் கவுன்​சில் தலை​வர் அந்​தோணியோ கோஸ்டா உள்​ளிட்​டோர் பங்​கேற்​றுள்​ளனர்.

பிரதமர் மோடி கடந்த 13-ம் தேதி டெல்​லி​யில் இருந்து பிரான்ஸ் சென்​றார். கடந்த 14-ம் தேதி அந்த நாட்டு அதிபர் இமானுவேல் மேக்​ரானைச் சந்​தித்​துப் பேசி​னார். அங்​கிருந்து ஸ்லோவேக்​கி​யா​வுக்​குச் சென்ற பிரதமர் மோடி, கடந்த 15-ம் தேதி அந்த நாட்டு பிரதமர் ராபர்ட் ஃபிகோவைச் சந்​தித்​துப் பேசி​னார்.

இதைத் தொடர்ந்து ஜி7 மாநாட்​டில் பங்​கேற்க ஸ்லோவேக்​கியா தலைநகர் பிராட்​டிஸ்​லா​வா​வில் இருந்து பிரதமர் மோடி நேற்று மீண்​டும் பிரான்​ஸுக்கு புறப்​பட்​டார். வரும் வழி​யில் சுவிட்​சர்​லாந்​தின் ஜெனீவா நகரில் அவர் தரை​யிறங்​கி​னார். அங்கு அந்த நாட்டு அதிபர் கய் பார்​மெலினைச் சந்​தித்​தார். அப்​போது வர்த்​தகம், பாது​காப்​பு, ஏஐ தொழில்​நுட்​பம், ஜி7 உச்சி மாநாடு தொடர்​பாக தலை​வர்​கள் இரு​வரும் ஆலோ​சித்​தனர்.

பின்​னர், ஜெனீ​வா​வில் இருந்து ஹெலி​காப்​டர் மூலம் பிரான்​ஸின் எவி​யான் நகருக்கு பிரதமர் மோடி சென்​றார். அங்கு நேற்று மாலை நடை​பெற்ற ஜி7 அமர்​வு​களில் அவர் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்​றார். ஜி7 மாநாட்​டின் போது அமெரிக்க அதிபர் ட்ரம்​பை, பிரதமர் மோடி நேற்று சந்​தித்​துப் பேசி​னார். இரு தலை​வர்​களும் கைகுலுக்கி கொண்​டனர்.

இரு​வரும் அருகருகே அமர்ந்து 5 நிமிடங்கள் பேசினர். கடந்த 2025-ம் ஆண்டு பிப்​ர​வரி​யில் அமெரிக்கா​வுக்கு சென்ற மோடி, அதிபர் ட்ரம்பை சந்​தித்​துப் பேசி​னார். அதன் பிறகு அமெரிக்க அரசின் கூடு​தல் வரி விதிப்​பால் இரு நாடு​கள் இடையி​லான உறவில் லேசான விரிசல் ஏற்​பட்​டது. இந்தச் சூழலில் சுமார் 16 மாதங்​களுக்​குப் பிறகு அதிபர் ட்ரம்பை அவர் நேற்று மீண்​டும் சந்​தித்​துப் பேசி​னார்.

மாநாட்​டின் இறுதி நாளான இன்று பிரிட்​டிஷ், கனடா, இத்​தாலி பிரதமர்கள், ஐக்​கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் ஜயாத் அல் நயான் உள்​ளிட்​டோரை பிரதமர் மோடி தனித்​தனி​யாகச் சந்​தித்​துப் பேச உள்​ளார். குறிப்​பாக அமெரிக்க அதிபர் ட்ரம்​புட​னும் பிரதமர் மோடி தனி​யாகப் பேச்​சு​வார்த்தை நடத்த உள்​ளார். இந்த பேச்​சு​வார்த்​தை​யில் வரி விதிப்பு விவ​காரம் குறித்து விரி​வாக ஆலோ​சிக்​கப்​படும் என்று தெரி​கிறது.

SCROLL FOR NEXT