உலகம்

விவிலிய காலத்து பழங்குடியின வம்சாவளியைச் சேர்ந்த மணிப்பூர் யூதர்களுக்கு இஸ்ரேலில் வரவேற்பு

செய்திப்பிரிவு

டெல் அவிவ்: மணிப்​பூரில் வசித்து வந்த விவிலிய காலத்து இஸ்ரேலின் பழங்​குடி​யின வம்​சாவளியைச் சேர்ந்​தவர்​கள் எனக் கருதப்​படும் 250-க்​கும் மேற்​பட்ட இந்​தி​யர்​கள், வியாழக்​கிழமை இஸ்​ரேல் சென்​றடைந்​தனர்.

இந்​தி​யா​வில் இருந்து அவர்​களை இஸ்​ரேலில் குடியமர்த்​து​வதற்​காக அந்​நாட்டு அரசு மேற்​கொண்டு வரும் சிறப்பு நடவடிக்​கை​யின் ஒரு பகு​தி​யாக அவர்​கள் நேற்​று​முன்​தினம் டெல் அவிவ் விமான நிலை​யத்தை வந்​தடைந்​தனர்.

இஸ்​ரேலிய தேசி​யக் கொடி​யின் நிறங்​களான நீலம் மற்​றும் வெள்ளை நிற பலூன்​களால் அமைக்​கப்​பட்ட வளை​வின் கீழ் வந்​திறங்​கிய அவர்​களை, அங்​கிருந்​தவர்​கள் பாரம்​பரிய யூதப் பாடல்​களைப் பாடி உற்​சாக​மாக வரவேற்​றனர்.

இந்​தி​யா​வின் வடகிழக்கு மாநில​மான மணிப்​பூரில் இருந்து சுமார் 4,600 “பெனே மெனாஷே' சமூகத்​தினரை இஸ்​ரேலுக்கு அழைத்து வர அந்​நாட்டு அரசு கடந்த நவம்பரில் முடி​வெடுத்​தது. அதன் பிறகு இஸ்​ரேல் வந்​தடைந்த முதல் குழு​வினர் இவர்​கள்​தான்’’ என்​பது குறிப்​பிடத்​தக்​கது. கி.​மு. 720-ல் அசிரியன் படையெடுப்பாளர்களால் நாடு கடத்​தப்​பட்ட இஸ்​ரேலின் 10 பழங்​குடி இனங்களில் ஒன்​றான ‘மெ​னாஷே’ வம்​சாவளியைச் சேர்ந்​தவர்​கள் இவர்​கள்.

சுமார் 20 ஆண்​டு​களாக இஸ்​ரேலில் வசித்து வரும் தாகன் சோலட் என்​பவர், சகோதர​ராக கருதும் தனது நண்​பரை வரவேற்க விமான நிலை​யம் வந்​திருந்​தார். அவர் கூறுகையில், ‘‘மணிப்​பூரில் நாங்​கள் அண்டை வீட்​டார். எங்​கள் கிராமத்​தில் இருந்த ஒரு சில யூதக் குடும்​பங்​களில் எங்​களது குடும்​பங்​களும் அடங்​கும். ஒன்​பது ஆண்டுகளுக்​குப் பிறகு எனது நண்​பரை இன்று பார்க்கிறேன். இந்​தி​யா​வில் இருந்த போது எனது மகனை அவர் தனது கைகளி​லேயே சுமந்து வளர்த்​தார்’’ என நெகிழ்ச்​சி​யுடன் தெரி​வித்​தார்.

வரலாற்​றுப் பின்​னணி

‘ஷாவே இஸ்​ரேல்' என்ற அமைப்​பின் தகவல்​படி, கடந்த 1990-களி​லிருந்து சுமார் 4,000 பெனே மெனாஷே சமூகத்​தினர் இஸ்​ரேலில் குடியேறி​யுள்​ளனர். இன்​னும் 7,000-க்​கும் மேற்​பட்​டோர் இந்​தி​யா​வில் வசித்து வரு​கின்​றனர். இவர்​களது செவிவழி வரலாற்​றின்​படி, பல நூற்​றாண்​டு​களுக்கு முன்பு இவர்​கள் பெர்​சி​யா, ஆப்​கானிஸ்​தான், திபெத் மற்​றும் சீனா வழி​யாக இடம்​பெயர்ந்​துள்​ளனர்.

அவ்​வாறு இடம்​பெயர்ந்த காலத்​தி​லும் விருத்​தசேதனம் போன்ற யூத மதச் சடங்​கு​களை இவர்​கள் தொடர்ந்து கடைபிடித்து வந்​துள்​ளனர். பின்​னர், 19-ம் நூற்​றாண்​டில் மணிப்​பூருக்கு வந்த மிஷனரி​களால் இவர்​கள் கிறிஸ்தவ மதத்​துக்கு மாற்​றப்​பட்​டனர் என்​பது இவர்​களது வரலாற்​றுப் பின்​னணி​யாக அறியப்​படு​கிறது.

தற்​போது இடம்​பெயர்ந்து வந்​துள்ள 250 பேரும் வடக்கு இஸ்​ரேலில் குடியமர்த்​தப்பட உள்​ளனர். இஸ்​ரேலிய குடியுரிமை பெறு​வதற்​காக அவர்​கள் முறைப்​படி யூத மதத்​துக்கு மாற வேண்​டும் என்​பது கவனிக்​கத்​தக்​கது. விமான நிலை​யத்​தில் இவர்​களை வரவேற்ற இஸ்​ரேல் குடியேற்​றத் துறை அமைச்​சர் ஓஃபிர் சோஃபர் கூறுகையில், ‘‘இது ஒரு வரலாற்​றுத் தருணம். ஆண்​டுக்கு 1,200 பேர் வீதம், இந்​தச் சமூகத்​தைச் சேர்ந்த அனை​வரையும் இங்கு அழைத்து வரு​வதற்​கான ஒரு மாபெரும் திட்​டத்​தின்​ தொடக்​கம்​தான்​ இது’’ என்​றார்​.

SCROLL FOR NEXT