பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது, பெரும் வன்முறை வெடித்தது. அங்குள்ள ரெபப்ளிக் சதுக்கத்தில் போராட்டக்காரர்கள் காரை தீயிட்டு கொளுத்தினர். | படம்: பிடிஐ | 

 
உலகம்

பிரான்ஸில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் பெரும் வன்முறை - நடந்தது என்ன?

கடைகள் சூறையாடல்; வரலாற்று கட்டிடம் தீக்கிரை

செய்திப்பிரிவு

பாரிஸ்: பிரான்​ஸில் அரசுக்கு எதிரான போராட்​டத்​தில் பெரும் வன்முறை வெடித்​துள்​ளது.

கடைகள் சூறை​யாடப்​பட்டு, கொள்​ளை​யடிக்​கப்​பட்​டதுடன், வரலாற்​றுச் சிறப்பு மிக்க கட்​டிடம் தீக்​கிரையானது.

பிரான்ஸ் தலைநகர் பாரி​ஸின் புறநகர் பகுதி​களில் உள்ள பள்​ளி​களில் போதிய உள்​கட்​டமைப்பு வசதி​கள் இல்​லாதது மற்​றும் ஆசி​ரியர் பற்​றாக்​குறையை எதிர்த்து, கடந்த மாதம் மாணவர்​கள் போராட்​டத்​தில் குதித்​தனர்.

இதற்​கிடை​யில், விலை​வாசி உயர்வு, பணவீக்​கம், அரசின் சிக்​க​னக் கொள்​கைகளுக்கு எதிராக மக்​கள் வீதி​களில் இறங்கி போராடத் தொடங்​கினர்.

மாணவர் அமைப்​பு​களு​டன் தொழிற்​சங்​கங்​கள், இடதுசாரி கட்​சிகள் மற்​றும் ‘மஞ்​சள் அங்கி’ இயக்​கத்​தினரும் இணைந்​துள்​ள​தால் இந்​தப் போராட்​டம் விஸ்வரூபம் எடுத்​துள்​ளது.

பிரான்ஸ் உள்​துறை அமைச்​சக தகவலின்​படி 5.50 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் இந்​தப் போராட்​டத்​தில் பங்​கேற்​றுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. 8 லட்​சத்​துக்​கும் அதி​கமானோர் போராடி வரு​வ​தாக தொழிற்​சங்​கங்​கள் கூறுகின்​றன.

போராட்​டத்​தில் வன்​முறைச் சம்​பவங்​கள் அரங்​கேறி வரு​கின்​றன. குறிப்​பாக பாரிஸ், மார்​சேய், லில், நிஸ் நகரங்​களில் வன்​முறை உச்​சகட்​டத்தை எட்​டியுள்​ளது.

லிமோஜஸ் பகுதி​யில் உள்ள 143 ஆண்​டுகள் பழமையான நக​ராட்சி கட்​டிடம் போராட்​டக்​காரர்​களால் தீக்​கிரையாக்​கப்​பட்​டது.

2 உல​கப் போர்​களை தாங்கிநின்ற இந்த வரலாற்​றுச் சிறப்​புமிக்க கட்​டிடம் சாம்​பலாக்​கப்​பட்​ட​தாக வரலாற்று ஆய்​வாளர்​கள் குற்​றம் சாட்​டியுள்​ளனர்.

இது மட்​டுமின்றி பல இடங்​களில் நூற்​றுக்​கணக்​கான வாக​னங்​கள் மற்​றும் பொதுச் சொத்​துகள் தீயிட்டு கொளுத்​தப்​பட்​டுள்​ளன.

இந்த அசாதா​ரண சூழலை தங்​களுக்கு சாதக​மாகப் பயன்​படுத்​திக் கொள்​ளும் சமூக​விரோத கும்​பல் சூப்​பர் மார்க்​கெட்​டுகள், செல்​போன் கடைகள் மற்​றும் வணிக வளாகங்​களை அடித்து நொறுக்கி, பொருட்​களை அள்​ளிச் செல்​கின்​றனர்.

இதனைத் தடுக்க முயன்ற கடை உரிமையாளர்​கள் மற்​றும் பொது​மக்​களை​யும் வன்​முறை​யாளர்​கள் கொடூர​மாகத் தாக்​கிய வீடியோக்​கள் சமூக வலைத்​தளங்​களில் வைரலாகி​யுள்​ளன.

அந்த வீடியோக்​களில், கடைகளைக் கொள்​ளை​யடிப்​பதை வன்​முறை​யாளர்​கள் ‘அர்​ஜென்ட் ஷாப்​பிங்’ எனக் குறிப்​பிடுவதை காண முடி​கிறது.

1200 பேர் கைது

வன்​முறையைக் கட்​டுப்​படுத்த காவல் துறை​யினர் கண்​ணீர் புகைக் குண்​டுகளை வீசி​யும், தண்​ணீரை பீய்ச்​சி​யடித்​தும் கூட்​டத்​தைக் கலைக்க முயன்​றனர்.

இச்​சம்​பவங்​களில் இது​வரை 1,200க்​கும் மேற்​பட்ட போராட்​டக்​காரர்​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ள​தாகவும், 150 போலீ​ஸார் காயமடைந்​துள்​ள​தாகவும் பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தெரி​வித்​துள்​ளார்.

இன்​னும் 6 மாதங்​களில் பிரான்ஸ் அதிபர் தேர்​தல் வர​விருக்​கும் நிலை​யில், இந்​தத் தொடர் வன்​முறைச் சம்​பவங்​கள் அதிபர் மேக்​ரான் அரசுக்கு கடும் அரசி​யல் நெருக்​கடியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT