உலகம்

லஷ்கர் இணை நிறுவனர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம்

செய்திப்பிரிவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்​தானில் தீவிர​வாதி ஹபீஸ்சயீதுடன் இணைந்து லஷ்கர்​-இ-தொய்பா அமைப்பை நிறு​விய​வர் அமீர் ஹம்​சா (66). இந்​தி​யா​வில் மட்​டுமின்றி உலகம் முழு​வதும் பல தீவிர​வாத செயல்களுடன் தொடர்​புடைய​வர். இந்​நிலை​யில் பாகிஸ்தானின் லாகூர் நகரில் ஒரு செய்​திச் சேனல் அலுவல​கத்​துக்கு வெளி​யில் அவர் மீது மர்ம நபர்​கள் துப்பாக்கிச்​ சூடு நடத்​தினர்.

இதில் படு​கா​யம் அடைந்த அவர் மருத்​து​வ​மனை​யில் அனும​திக்​கப்​பட்​டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்​ப​தாக கூறப்​படு​கிறது. ஓராண்டுக்கும் குறை​வான காலத்​தில் ஹம்சா தாக்குதலுக்கு ஆளானது இது இரண்​டாவது முறை​யாகும். கடந்த ஆண்டு மே மாதம் லாகூரில் உள்ள அவரது வீட்டுக்கு வெளி​யில் அடை​யாளம் தெரி​யாத நபர்​களால் அவர் சுடப்​பட்​டார். பிறகு அவர் குணமடைந்தார்.

SCROLL FOR NEXT