உலகம்

​இம்ரான் கான் ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா சதி? - வெளியான ஆவணத்தால் வெடித்தது சர்ச்சை

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: பாகிஸ்​தானின் முன்​னாள் பிரதமர் இம்ரான் கான், தாம் பதவியி​லிருந்து நீக்​கப்​பட்​டதற்​குப் பின்​னால் வெளி​நாட்​டுச் சதி இருப்​ப​தாகத் தொடர்ந்து குற்​றச்​சாட்​டு​களை கூறி வந்​தார். இதற்கு வலுச் சேர்க்​கும் வித​மாக, ரகசிய அரசு தூதரக ஆவணம் ஒன்று தற்​போது கசிந்​துள்​ளது பாகிஸ்​தானில் சர்ச்​சையை கிளப்பி​யுள்​ளது.

‘சைபர்' என்று அழைக்​கப்​படும் இந்த ஆவணம், மார்ச் 2022-ல் அமெரிக்கா​வுக்​கான அப்​போதைய பாகிஸ்​தான் தூதர் ஆசாத் மஜீத் கான் மற்​றும் அமெரிக்க தூதர் டொனால்டு லூ ஆகியோருக்கு இடையே நடை​பெற்ற உரை​யாடலை விவரிக்கிறது. இந்த உரை​யாடல்​தான் இம்​ரான் கானின் ஆட்சி கவிழ்ப்​புக்​கும், அவரது தற்​போதைய சிறை​வாசத்​திற்​கும் வழி​வகுத்​த​தாகக் கூறப்​படு​கிறது.

அமெரிக்​காவைச் சேர்ந்த புல​னாய்வு ஊடக​மான டிராப் சைட் , ‘கேபிள் ஐ-0678' (cable I-0678) என அடை​யாளம் கொண்ட இந்த அசல் ஆவணத்தை வெளி​யிட்​டுள்​ளது. உக்​ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்​பில் பாகிஸ்​தான் நடுநிலை வகித்​த​தால் ஜோ பைடன் அதிருப்​தி​யடைந்​தார். இதையடுத்து தனது நிர்​வாகத்​தின் கீழ் உள்ள அமெரிக்க வெளி​யுறவுத்​துறை மூலம், மார்ச் 7, 2022-ல் நடை​பெற்ற சந்​திப்​பின்​போது, இம்​ரான் கானைப் பிரதமர் பதவியி​லிருந்து நீக்​கு​மாறு வற்​புறுத்​தி​யுள்​ளதை அந்த ஆவணம் சுட்​டிக்​காட்​டு​கிறது.

மேலும், ஆப்​கானிஸ்​தானுக்கு எதி​ராகத் தனது ராணுவத் தளங்களை அமெரிக்​கப் படைகள் பயன்​படுத்த இம்​ரான் கான் அனு​ம​திக்​காததும் அமெரிக்கா​வுக்கு கடும் ஆத்​திரத்தை ஏற்படுத்தி​ய​தாக அதில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT