உலகம்

அமெரிக்கா தீவிர தாக்குதல்: அமைதிப் பேச்சு நடத்திய ஈரான் தலைவர் படுகாயம்

செய்திப்பிரிவு

வாஷிங்​டன்: அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையே நேற்று 34-வது நாளாக போர் நீடித்​தது. ஈரான் முன்னாள் வெளி​யுறவு அமைச்​சர் கமல்கராஸி (81), அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்​ஸுடன் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடத்தி வந்​தார்.

இந்த பேச்சுவார்த்தையில் முன்​னேற்​றம் ஏற்​படும் என்று பெரிதும் எதிர்​பார்க்​கப்​பட்​டது. இந்த சூழலில் ஈரான் மீதான தாக்​குதல்​களை அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் நேற்​றுமுன்​தினம் தீவிரப்​படுத்​தின. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கமல்கராஸி​யின் வீட்​டின் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்டுள்​ளது.

          

இதில் அவர் படு​கா​யம் அடைந்​தார். அவரது குடும்ப உறுப்​பினர்கள் உயி​ரிழந்​திருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்ளன. அமெரிக்காவுடன் அமைதிப் பேச்​சுவார்த்தை நடத்​திய ஈரான் மூத்த தலை​வரின் வீட்டின் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டிருப்​பது பெரும் பின்​னடை​வாகக் கருதப்​படு​கிறது.

தொழிற்சாலைகள் மீது குறிமேலும் ஈரான் தலைநகர் டெஹ்ரான் அரு​கே​யுள்ள தொழிற்​சாலைகளை குறி வைத்து அமெரிக்​கா, இஸ்​ரேல் போர் விமானங்​கள் நேற்று அதிதீ​விர தாக்​குதல்​களை நடத்​தின. இதற்கு பதிலடி​யாக மத்​திய கிழக்​கில் உள்ள அமெரிக்க ராணுவ மையங்​களை குறி வைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவு​கணை​கள், ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்​தியது.

SCROLL FOR NEXT