உலகம்

ட்ரம்ப் போரை தீவிரப்படுத்தினால் ஐரோப்பிய நாடுகள் மீது ஏவுகணைகள் பாயும் ஈரான் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

லண்டன்/டெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தற்போதைய போரை தீவிரப்​படுத்​தி​னால், அமெரிக்​கப் படைகளுக்கு ஆதரவு அளிக்கும் ஐரோப்பிய நாடுகளின் மீது ஏவுகணைத் தாக்​குதல்​களை நடத்​து​வோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்​துள்​ள​தாக ‘பை​னான்​சி​யல் டைம்​ஸ்’ நாளிதழ்செய்தி வெளியிட்​டுள்​ளது.

ஈரான் அரசு நிர்​வாகத்​துக்கு நெருக்​க​மான இரு முக்​கிய மூத்த அதி​காரி​கள் இதுகுறித்து கூறி​யிருப்​ப​தாவது: அமெரிக்​கா​வின் விமானங்​களுக்கு எரிபொருள் நிரப்ப அண்​மை​யில் அனு​மதி அளித்த பல்​கேரி​யா​வின் ‘பெஸ்​மர்’ விமானப் படைத் தளத்​தைக் குறிவைப்​பது குறித்து ஈரான் படைகள் தற்​போது ஆராய்ந்து வரு​கின்​றன. மேலும், சைப்​ரஸ் நாட்​டில் உள்ள பிரிட்​டன் விமானப் படைத் தளத்​தைக் குறிவைப்​பதும் அவர்​களின் பரிசீலனை​யில் உள்​ளது.

போரின் தீவிரம் அதி​கரிக்​கும் பட்​சத்​தில் ஹார்​முஸ் ஜலசந்தி பகுதி​யில் அமைந்​துள்ள கடல்​வழி ஒளி​யிழை கேபிள்​களை துண்டிப்​பது குறித்​தும் ஈரான் ராணுவப் படைகள் ஆய்வு செய்து வரு​கின்​றன. ஹார்​முஸ் ஜலசந்தி குறித்த பேச்​சு​வார்த்​தைகள் முடங்​கி​யுள்ள நிலை​யில், ஈரானின் உச்​சத் தலை​வர் மொஜ்தபா கமேனி, நாட்​டின் பாது​காப்பு மற்​றும் ராணுவத்​தின் முக்​கியப் பொறுப்​பு​களில் தீவிர நிலைப்​பாட்​டைக் கொண்​ட​வர்​களை அண்​மை​யில் நியமித்​துள்​ளார்.

ஈரானின் கட்​டமைப்பு வசதி​கள் மீது அமெரிக்கா தாக்​குதல் நடத்தி​னால், மத்​திய கிழக்கு மண்​டலத்​தை​யும் தாண்டி ஐரோப்பா வரை ஈரானின் தாக்குதல் விரிவடை​யும். இவ்​வாறு அவர்​கள் கூறி​யுள்​ளனர். ஈரான் நிலப்​பரப்​பின் மீது தாக்​குதல் நடத்​தப் பயன்​படும் எந்​தவொரு ராணுவத் தளமும் எங்​களின் தாக்​குதலுக்கு உரிய இலக்​காகக் கருதப்​படும் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்​சிகரப் படைப் பிரிவு (ஐஆர்​ஜிசி) ஏற்​கெனவே எச்சரித்​துள்​ளது.

SCROLL FOR NEXT