அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

 
உலகம்

ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியில் இருந்து ராணுவ விமானத்தில் பயணித்த ட்ரம்ப்

வேட்டையன்

வாஷிங்டன்: கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பங்கேற்றார். அதன் பின்னர் ஈரானின் அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்கும் வகையில் அங்கிருந்து ராணுவ விமானத்தில் அவர் பயணித்ததாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது.

மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் காரணமாக பதற்றம் நிலவி வருகிறது. கடந்த பிப்ரவரி இறுதியில் இந்த மோதல் தொடங்கியது. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவரது மரணத்துக்கு பழி தீர்ப்போம் என்று ஈரான் உறுதியேற்றுள்ளது. இந்நிலையில், மாற்று விமானத்தில் ட்ரம்ப் பயணித்த தகவல் வெளியாகி உள்ளது.

கத்தார் பரிசளித்த விமானத்தை துருக்கி பயணத்துக்கு ட்ரம்ப் பயன்படுத்தி இருந்தார். ஆனால், அங்கிருந்து மீண்டும் அவர் திரும்பிய போது அமெரிக்க அதிபரின் பழைய ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானத்தை பயன்படுத்தினார். அப்போது அவரது புதிய விமானத்தின் பாதுகாப்பு அம்சம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

ரகசிய பயணம்

துருக்கியில் இருந்து பழைய ‘ஏர் போர்ஸ் ஒன்’ விமானத்தில் ட்ரம்ப் பயணிப்பதாக அப்போது ஊடகத்தினர் மற்றும் செய்தியாளர்கள் நம்பினர். அதற்கான காட்சிகளும் வெளியாகின. ஆனால், அந்த விமானத்தில் இருந்து விமான நிலைய இலகுரக சரக்கு வாகனத்தில் பயணித்து, சிறிய ரக ராணுவம் விமானத்தில் பயணித்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

அந்த விமானம் மூலம் பிரிட்டன் சென்ற அவர், அங்கிருந்து தனது வழக்கமான விமானத்தில் அமெரிக்கா திரும்பி உள்ளார். ஈரான் அச்சுறுத்தல் காரணமாக மூன்றாவது விமானத்தில் ரகசியகமாக துருக்கியில் இருந்து ட்ரம்ப் வெளியேறி உள்ளதாக தகவல். இது இப்போது பேசுபொருளாகி உள்ளது.

SCROLL FOR NEXT