உலகம்

மொஜ்தபா காமேனி வீடியோவை வெளியிட்டது ஈரான்

கவலைக்கிடமாக இருப்பதாக வதந்தி பரவல் எதிரொலி

செய்திப்பிரிவு

டெஹ்ரான்: ஈ​ரானின் உச்ச தலை​வர் மொஜ்தபா காமேனி கவலைக்​கிட​மாக இருப்​ப​தாக தகவல் வெளி​யான நிலை​யில் அவர் தனது ஆதர​வாளர்​களுடன் உரை​யாடு​வது போன்ற வீடியோவை ஈரான் வெளி​யிட்​டுள்​ளது. அமெரிக்கா​வும் இஸ்ரேலும் நடத்​திய தாக்​குதலில் ஈரான் உச்ச தலை​வர் அயத்துல்லா அலி காமேனி உயி​ரிழந்​தார். இதையடுத்​து, அவரது மகன் மொஜ்தபா காமேனி (56) உச்ச தலை​வ​ரா​னார்.

அமெரிக்​கா​வின் தாக்​குதலில் மொஜ்தபா காமேனி படுகாயமடைந்​த​தாக தகவல் வெளி​யானது. பதவி​யேற்​றது முதல் அவர் பொது​வெளி​யில் தோன்​ற​வில்​லை, எழுத்​துப்​பூர்​வ​மான அறிக்​கைகள் மட்​டுமே வெளிவந்​தன. தனது தந்​தை​யின் இறுதிச்சடங்​கில் கூட அவர் பங்​கேற்​க​வில்​லை.

இந்த சூழலில் காமேனி​யின் உடல்​நிலை மிக​வும் கவலைக்கிடமாக இருப்​ப​தாக இஸ்​ரேலின் சேனல் 14 கடந்த வெள்ளிக்​கிழமை செய்தி வெளி​யிட்​டது. இதற்​கு, தி ஜெருசலேம் போஸ்ட் வெளி​யிட்ட முந்​தைய அறிக்​கை, ஈரான்​வயர் மற்​றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனின் நிர்​வாகத்​துக்கு நெருக்கமான ஆதா​ரங்​களை மேற்​கோள் காட்​டியது.

தி ஜெருசலேம் போஸ்ட், “காமேனி விரை​வில் தி​யாகி ஆனார் என்ற செய்​தி​யைக் கேட்​டால் நாங்​கள் ஆச்​சரியப்பட மாட்​டோம்” என்று தெரி​வித்​திருந்​தது. மேலும் அரசுத் தொலைக்​காட்சி நேர்காணல் ஒன்​றில் பேசிய ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், உச்ச தலை​வருடன் நேரடித் தொடர்பு கொள்​வது மிக​வும் கடினமாகி​விட்​ட​தாகத் தெரி​வித்​தார்.

இந்​நிலை​யில், மொஜ்தபா காமேனி தனது ஆதர​வாளர்​களு​டன் உரை​யாடு​வது போன்ற வீடியோவை ஈரான் வெளி​யிட்​டுள்​ளது. மெஹ்ர் செய்தி நிறு​வனத்​தால் முதல் முறை​யாக வெளி​யிடப்​பட்ட இந்த வீடியோ, காமேனி​யின் உடல்​நிலை குறித்த வரும் ஊகங்களுக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கும் நோக்​கில் வெளியிடப்பட்டுள்​ளது. இருப்​பினும்​, அந்​த வீடியோ எந்​த தேதியில்​ பதிவு செய்​யப்​பட்​டது என்​ற விவரம்​ தெரிய​வில்​லை.

SCROLL FOR NEXT