ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கி​யான்

 
உலகம்

சரணடைய வேண்டும் என்ற ட்ரம்ப்பின் கோரிக்கையை நிராகரித்த ஈரான் அதிபர் மசூத்!

வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலுக்கு மன்னிப்பு கோரினார்

செய்திப்பிரிவு

டெஹ்ரான்: வளை​குடா நாடு​கள் மீதான தாக்​குதல்​களுக்​காக ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கி​யான் நேற்று மன்​னிப்பு கோரி​னார். அதே​நேரம் சரணடைய வேண்​டும் என்ற ட்ரம்​பின் கோரிக்​கையை நிராகரித்​தார்.

இஸ்​ரேலும் அமெரிக்கா​வும் இணைந்து ஈரான் மீது தாக்​குதல் நடத்​தி வருகின்றன. இதில் ஈரானின் உச்ச தலை​வர் அயத்துல்லா அலி காமேனி உட்பட முக்​கிய தலை​வர்​கள் கொல்​லப்​பட்​டனர்.

இதையடுத்​து, அமெரிக்க படைத்​தலங்​கள் அமைந்​துள்ள வளை​குடா நாடு​கள் மற்​றும் இஸ்​ரேல் மீது ஈரான் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. பதி​லுக்கு இஸ்​ரேலும் தாக்​குதல் நடத்தி வரு​கிறது.

          

காமேனி கொல்​லப்​பட்ட பிறகு ஈரானை நிர்​வகித்து வரும் மூன்று பேர் கொண்ட இடைக்​காலத் தலை​மைக் குழு​வில் அந்​நாட்டு அதிபர் மசூத் பெசஷ்கி​யான் இடம்​பெற்​றுள்​ளார்.

இந்​நிலை​யில், பெசஷ்கி​யான் அரசு தொலைக்​காட்​சி​யில் நேற்று உரை​யாற்​றும்​போது, ‘‘ஈரா​னால் தாக்​கப்​பட்ட அண்டை நாடு​களிடம் என் சார்​பாக​வும், ஈரான் சார்​பாக​வும் நான் மன்​னிப்பு கேட்​டுக்​கொள்​கிறேன். இனிமேல் எந்த அண்டை நாடு​களின் மீதும் தாக்​குதல் நடத்​தப்​ப​டாது என்​றும், ஈரானைத் தாக்​காத நாடு​கள் மீது ஏவு​கணை​கள் ஏவப்​ப​டாது என்​றும் இடைக்​காலத் தலை​மைக்​குழு ஒப்​புக்​கொண்​டுள்​ளது.

ஈரானிய மக்​கள் நிபந்​தனை​யின்றி சரணடைய வேண்​டும் என்ற எதிரி​களின் (ட்ரம்ப்) ஆசை, அவர்​களின் கல்​லறை யோடு​தான் போகும்’’ என்றார்.

முன்​ன​தாக இதுகுறித்து ஈரான் வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அராக்சி கூறும்​போது, ‘‘ஈரானின் புரட்​சிகர பாது​காப்​புப் படை (ஐஆர்​ஜிசி) தற்​போது சுயாதீன​மாக செயல்​பட்டு வரு​கிறது. எந்த இலக்​கு​களைத் தேர்ந்​தெடுக்க வேண்​டும் என்​ப​தில் கவன​மாக இருக்​கு​மாறு எங்​களது ஆயுதப் படைகளுக்கு ஏற்​கெனவே அறி​வுறுத்தி உள்​ளோம்.

உண்​மை​யில், எங்​களது ராணுவப் பிரிவு​கள் இப்​போது முன்​கூட்​டியே வழங்​கப்​பட்ட பொது​வான வழி​முறை​களின் அடிப்​படை​யில்​ ஓரளவு தனித்​தே செயல்​பட்​டு வரு​கின்​றன’’ என்​றார்​.

SCROLL FOR NEXT