டெஹ்ரான்: கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்காவின் மிகப்பெரிய விமானப் படைத் தளம் உள்ளது. அங்கு 10,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் முகாமிட்டு உள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன.
தோஹா விமானப் படைத்தளத்தில் இருந்து புறப்படும் அமெரிக்க போர் விமானங்கள், ஈரான் மீது குண்டுமழை பொழிந்து வருகின்றன.
இந்த சூழலில் தோஹா விமானப் படைத் தளத்தில் நிறுவப்பட்டிருந்த அமெரிக்காவின் ஏஎன்/எப்பிஎஸ்-132 என்ற அதிநவீன ரேடாரை ஏவுகணை தாக்குதல் மூலம் அழித்துவிட்டதாக ஈரான் கூறியுள்ளது.
இதுதொடர்பாக அந்த நாட்டு ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்காவின் ஏஎன்/எப்பிஎஸ்-132 ரேடார் சுமார் 5,000 கி.மீ. தொலைவு வரை கண்காணிக்கும் திறன்கொண்டது. கத்தாரில் நிறுவப்பட்டிருந்த இந்த ரேடாரை ஏவுகணை மூலம் அழித்துவிட்டோம்’’ என கூறப்பட்டுள்ளது.