இந்​திய பெருங்​கடல் பகு​தி​யில் உள்ள டியாகோ கார்​சியோ தீவில் அமைந்துள்ள அமெரிக்கா, இங்​கிலாந்து ராணுவ முகாமின் சாட்டிலைட் படம்

 
உலகம்

4,000 கி.மீ தூர இலக்கை தாக்கும் ஏவுகணையை வீசிய ஈரான்: அமெரிக்கா, இங்கிலாந்து அதிர்ச்சி

இந்​திய பெருங்​கடலில் டியாகோ கார்​சியோ தீவு மீது ஏவுகணை வீச்சு

செய்திப்பிரிவு

டெஹ்ரான்: ஈ​ரானில் இருந்து 4,000 கி.மீ தொலை​வில் உள்ள டியாகோ கார்​சியா தீவில் அமெரிக்க மற்​றும் இங்​கிலாந்து ராணுவ முகாம் மீது ஏவு​கணை வீசி உலக நாடு​களை மிரள​வைத்​துள்​ளது ஈரான்.

ஈரான் தன்​னிடம் 2,000 கி.மீ. தூரம் உள்ள இலக்கை தாக்​கும் ஏவு​கணை​கள் உள்ளன என்​று​தான் இது​வரை உலகுக்கு அறி​வித்​திருந்​தது. ஆனால், ஈரானிலிருந்து 4,000 கி.மீ. தொலை​வில், இந்​திய பெருங்​கடல் பகு​தி​யில் இருக்​கும் டியாகோ கார்​சியோ தீவு மீது ஏவு​கணை​களை வீசி உலக நாடு​களை மிரட்​டி​யுள்​ளது. இந்த தீவில் அமெரிக்கா மற்​றும் இங்​கிலாந்து ராணுவ முகாம் உள்​ளது. இங்​கு​தான் அமெரிக்​கா​வின் குண்டு வீச்சு விமானங்​கள் நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ளன.

          

இந்த தீவை நோக்கி ஈரான் 2 நடுத்தர ரக ஏவு​கணை​களை வீசி​யுள்​ளது. இதில் ஒரு ஏவு​கணை தோல்​வியடைந்து விட்​டது. ஒரு ஏவுகணையை அமெரிக்கா எம்​எம்-3 ஏவு​கணை மூலம் இடைமறித்து அழித்​த​தாக கூறப்​படு​கிறது. இதன் மூலம் ஈரான் போர் இந்​தி​யப் பெருங்​கடல் பகுதி வரை விரிவடைந்​துள்​ளது.

ஈரானின் இந்த தொலை​தூர தாக்​குதல் அமெரிக்​கா, இஸ்​ரேல், வளை​குடா நாடு​களுக்கு அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. மேலும் வான் பாது​காப்பு கருவி​களை பல இடங்​களில் அமைக்க வேண்​டிய நெருக்​கடி நிலைக்​கும்​ இந்​த நாடு​கள்​ ஆளாகி​யுள்​ளன.

SCROLL FOR NEXT