உலகம்

அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தவிர ஈரானுக்கு வேறு வழியே கிடையாது: ட்ரம்ப் கருத்து

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திடு​வதை தவிர ஈரானுக்கு வேறு வழி இல்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.

அமெரிக்​கா, ஈரான் இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி தொடங்கிய போரை கடந்த ஏப்​ரல் 8-ம் தேதி இருதரப்​பும் இணைந்து தற்​காலிகமாக நிறுத்தி உள்ளன. எனினும் கடந்த சில வாரங்​களாக அமெரிக்கா​வும் ஈரானும் பரஸ்​பரம் தொடர் தாக்​குதல்​களில் ஈடு​பட்டு வரு​கின்​றன.

இதுதொடர்​பாக என்​பிசி நியூஸ் ஊடகத்​துக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: நாங்​கள் போர் நிறுத்​தத்தை மீற​வில்​லை. ஈரான் ராணுவம் அத்​து​மீறும் ​போது தகுந்த பதிலடி அளிக்​கிறோம்.

ஈரானின் ட்ரோன், ஏவு​கணை உற்​பத்தி ஆலைகளை முழு​மை​யாக அழித்​து​விட்​டோம். அவர்​களின் ஏவுதளங்​களை தகர்த்து உள்​ளோம். எனினும் அவர்​களிடம் இன்​ன​மும் 22 சதவீதம் அளவுக்கு ஏவு​கணை​கள், ட்ரோன்​கள் உள்​ளன. ஈரான் வலு​வாக இருப்​ப​தாக அந்த நாட்​டின் தலை​வர்​கள் நம்​பு​கின்​றனர். இதன்​ காரண​மாகவே ஒப்​பந்​தம் கையெழுத்​தாவ​தில் தாமதம் ஏற்​பட்டு வரு​கிறது. ஆனால் அமெரிக்கா​வுடன் ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திடு​வதை தவிர ஈரானுக்கு வேறு வழியே இல்​லை. இருதரப்பு ஒப்​பந்​தம் கையெழுத்​தாக சிறிது காலம் ஆகலாம். இவ்​வாறு அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.

ஈரானை ஒட்டி உள்ள ஹார்​முஸ் ஜலசந்​தி​யின் இரு​புற​மும் அமெரிக்க போர்க்​கப்​பல்​கள் தடுப்பு அரண்​களை அமைத்​துள்​ளன. இதன்​மூலம் ஈரான் துறை​முகங்​களில் இருந்து வரும் சரக்கு கப்​பல்​களை அமெரிக்க போர்க்​கப்​பல்​கள் தடுத்து வரு​கின்​றன. இந்த சூழலில் ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் முகாமிட்​டிருக்​கும் அமெரிக்க கப்​பல்​கள் மீது ஈரான் ராணுவம் நேற்று ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்த முயற்சி செய்​தது. அந்த ட்ரோன்​கள் நடு​வானில் சுட்டு வீழ்த்​தப்​பட்​ட​தாக அமெரிக்க கடற்​படை தெரி​வித்​துள்​ளது.

கடந்த ஏப்​ரல் மாதம் அமெரிக்​கா, ஈரான் பிர​தி​நி​தி​கள் இடையே பாகிஸ்​தானில் அமைதி பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. ஆனால் அந்த பேச்​சு​வார்த்தை தோல்​வி​யில் முடிந்​தது. இந்த சூழலில் பாகிஸ்​தான் உள்​துறை அமைச்​சர் மோக்​சின் நக்​வி, ஈரான் தலைநகர் டெஹ்​ரானுக்கு சென்​றுள்​ளார்.

ஈரான் வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அராக்சி உள்​ளிட்​டோரை பாகிஸ்​தான் அமைச்​சர் நக்வி நேற்று சந்​தித்து முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். அமெரிக்​கா​வின் சார்​பில் ஈரான் தரப்​புடன்​ அவர்​ சமரச பேச்​சு​வார்த்​தை நடத்​தி​ய​தாக தகவல்​கள்​ வெளி​யாகி உள்​ளன.

SCROLL FOR NEXT