உலகம்

கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது ஈரான் தாக்குதல்: 15 இந்தியர்கள் உட்பட 20 பேர் மீட்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமெரிக்​கா, இஸ்​ரேல் ஆகிய நாடு​கள் நடத்​திய தாக்குதலுக்கு பழி​வாங்​கும் வித​மாக, குவைத், ஐக்​கிய அரபு அமீரகம், ஓமன், கத்​தார் ஆகிய நாடு​களில் உள்ள அமெரிக்​கத் தளங்களை ஈரான் தாக்​கியது. இந்​நிலை​யில் தற்​போது இராக்கிலும் ஈரான் தாக்​குதலைத் தொடங்​கி​யுள்​ள​து.

இந்​நிலை​யில் ஓமன் அருகே கடலில் கச்சா எண்​ணெய் ஏற்றி வந்த சரக்​குக் கப்​பல் மீது திடீரென ஈரான் விமானப் ​படை நேற்று தாக்குதல் நடத்​தி​யது. இந்​தக் கப்​பல் ஹோர்​முஸ் நீரிணை பகுதியில் நேற்று வந்து கொண்​டிருந்த போது இந்​தத் தாக்​குதல் நடந்​துள்​ளது. இதில் கப்​பல் தீப்​பற்றி எரிந்​தது. இதையடுத்து இந்தக் கப்​பலில் இருந்த 15 இந்​தி​யர்​கள் உட்பட 20 பேர் மீட்கப்பட்டனர். தாக்​குதலில் 4 ஊழியர்​கள் காயமடைந்​தனர்.

          

அவர்​களுக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்​டுள்​ள​தாக ஓமன் கடல்​சார் பாது​காப்பு மையம் தெரி​வித்​துள்​ளது. கப்​பலில் இருந்த 20 ஊழியர்களில் 5 பேர் ஈரான் நாட்​ட​வர் ஆவர். மேலும் ஏவு​கணை தாக்​குதல் மூலம் ஓமனின் துக்​கும் துறை​முக​மும் தாக்கப்பட்டதாக ஓமன் அதி​காரி​கள் தெரி​வித்​தனர். கப்​பல் ஊழியர்​கள் 20 பேரும் தற்​போது பாது​காப்​பான இடத்​துக்​குக்​ கொண்​டு செல்​லப்​பட்​ட​தாக அந்​த அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT