புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து மலிவு விலையில் பொருட்கள் குவிக்கப்படுவதாக உள்நாட்டு உற்பத்தியாளர்களின் புகார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூன்று தயாரிப்புகளுக்கு எதிராக இந்தியா மலிவு விலை இறக்குமதி எதிர்ப்பு (ஆன்டி-டம்பிங்) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மத்திய வர்த்தக அமைச்சகத்தின் அறிவிக்கையின்படி, இந்த விசாரணையில் சீனாவுடன் சேர்த்து அமெரிக்கா, கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய மேலும் நான்கு நாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.